Thursday, 20 September 2012

36. தமிழ்த்திருமகன்


மலையாள தேசத்து மறக்கமுடியா நாட்களில்
இன்னும் பல உண்டு எழுத்தில் வடிக்க
போன புதிசில் ரேஷன் ஆபீஸ் தேட
இடம் அறியாமல் வரும் பெண்ணைக் கேட்க

சரியாவே சொன்னாள் இருக்குமிடம் போக
சமயம் கழிந்து என் பணி முடித்து
திரும்பி வரவே ஒரு செக்கனை நோக்கி
காஃபி ஹௌஸ் எவ்விட நானும் கேட்க

அவன்சொன்ன திசையில் அப்பாவியாய் நடக்க
காஃபி ஹௌஸ் வராமல் நகர எல்லை வர
எதிர் திசையில் வந்த இனிமைப் பெண்ணிடம்
சரியான இடம் எதிரே என்று அறிந்து

சமமாய் அவளுடன் பின்னவும் நடக்க
தெரிந்துகொண்டேன் டெலிபோன் பணியை
குரலின் இனிமையால் கவரப் பட்டு
விட மனமில்லாமல் காஃபி ஹௌஸ் சென்றேன்

அன்றுதோன்றியது மனதில் என்னவோ
ஆழமாகவே எண்ணத்தில் பதிய
இடம்வழி கேட்க என்றும் நானும்
பெண்டிர்களையே தெரிந்து எடுத்தேன்

காடு மேடு தெரு பலவாய்ச் சுற்றியும்
கண்டுகொண்டேன் உத்தியின் பலத்தை
எண்ணி வியந்தேன் மங்கையர் அறிவை
என்றும் பாராட்டினேன் அவர்கள் துணிவை

மூன்று வருடம் மேகமாய்க் கழிந்து
முழுப்பணி முடியவும் மாற்றல் ஆர்டர் வரவும்
அறிந்து கொண்டேன் அடுத்துப் போவது
தமிழ்நாட்டிலுள்ள குக்கிராமம் என்று

இவ்விடம் கழித்த இனிமைப் பொழுதுகள்
அலை அலையாய் மனத்தில் புயலாய்
ஆர்டர் கேன்சல் பண்ண நானும் முயன்று
முடியாதெனத் தெரிந்து மனமும் நொந்தேன்

பாதி எரிச்சல் பாதி அதிருப்தியுடன்
குக்கிராம வீதியில் வங்கி தேடி அலைய
சுமாரான அழகில் தேவதை வந்தாள்
அறியாமல் அவளிடம் வங்கி இடம் கேட்க

ஏண்டா உனக்கு வங்கி வழி சொல்ல
என் பொண்டாட்டிதான் கிடைத்தாளா என்று
டீக் கடையிலிருந்த தமிழ்த் திருமகன்
தாறுமாறாய்த் திட்டிக் கொண்டிருந்தான்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

Monday, 17 September 2012

35. அக்கப்போர்


அக்கப்போருக்கும் வைக்கப்போருக்கும்
அர்த்தமளிக்க பையனும் கேட்டான்
அர்த்தங்கள் அனைத்தையும் அளவாய்க்கூறி
அவையெல்லாம் சம்பந்தமில்லாதவை என்க

பொறியாய் மனதில் எண்ணமும் உதிக்க
முப்பது வருடம் முன்நோக்கி நகர்ந்தேன்
நடந்த சம்பவம் கோர்வையாய் வரவே
நானே புதியதொரு விளக்கத்தைத் தேட

அன்பர் என்னைவிட மூன்றுவயசு மூத்தவர்
படித்தது எல்லாம் ஒரே கிராம பள்ளிக்கூடம்
நான் கொஞ்சம் நன்றாய்ப் படிக்கிற ஜாதி
படிப்பில் அவரோ அப்பட்டமான லோ

கோட்டு போட்டுக்க கலர் கனவாய் கண்டு
கோட்டு கோட்டாய் ஒவ்வொரு வகுப்பிலும்
என்னோடு சமமாய் இருப்பதற்கு அஞ்சி
வெட்கப்பட்டு வராமல் வீட்டினில் இருக்க

படித்தபையனாகையால் வேலைக்குப் போகாமல்
களத்தின் வைக்கப்போரே கதியாய் கிடக்க
ஒவ்வொரு நாளும் ஓட்டு போட்ட மைபோல்
காதல் கனவும் ஒட்டிக் கொள்ளு(ல்லு)ம் அவரை

வயசுக்குவந்த ரெண்டு வயசுப்பெண்ணுங்கள்
போட்டா போட்டியில் வளைத்துப்போட எண்ணி
எக்ஸ்டிரீம் லெவலுக்கே எப்பொழுதும் செல்ல
இருவரையும் மனுஷன் மாற்றி மாற்றி வெல்ல

பலநாள் உறவோ ஒரு நாள் வெளிப்பட
பாவம் பெண்ணுங்க மதர்கள் இருவரும்
தங்களின் கதியை கூச்சலிட்டு சண்டையிட
விஜயம் தெரிந்தோர் சிரிப்பாய்ச் சிரிக்க

ஊர்த்தலைவர்கள் முடிவில் பஞ்சாயத்து கூட்ட
ஒருத்தி அங்கே நாணத்தில் “ஆப்சென்ட்”
மற்றொருத்திமட்டும் வெட்கத்தை விட்டுப்பிட்டு
பஞ்சாயத்தார் முன்னால் பிட்டுபிட்டு வைக்க

கோட்டு போடும் ஆசைக்கு பூட்டைப்பூட்டி
ஓட்டுபோட்டார் அவளின் திருமணமுடிவுக்கு
ஊரெல்லாம் இன்றும் அதுபற்றி இன்னும்
வைக்கப்போரில் நடந்த அக்கப்போராய் நினைக்க

சம்பந்தா சம்பந்தம் சொற்களுக்கு இல்லை
சம்பவம் இதுபோல் கிராமத்தில் நடக்கும்
அரைகுறை படிப்பால் கிறுக்காய் கிறுக்க
சம்பந்தம் உண்டாகும் விளக்கமும் பெற்றேன்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU