அன்றொரு நாள்
காலைப்பொழுதில்
அவசர அவசரமாய் மனைவி
துரத்த
வேண்டா
வெறுப்பாய்ப் பேன்ட்டைப் போட்டு
வந்த கோபத்தை
முகத்தில் தேக்கி
பக்கத்தில்உள்ள
மளிகைக்கடை நோக்கி
பயணம் தொடுத்தேன்
“சன்னி”யைத் தேத்தி
இந்த நாள் இனிய
நாளாய் இருக்க
இஷ்டமுடன்கேட்டும்
நோ புண்ணியம்
பைசா எடுத்துச்
சென்றால் பாதகமில்லை
வாங்கப்போவதோ
கடன்மேல் கடனில்
இன்று எப்படி
“இளிப்பது” எண்ணி
இருமுறை அதை
ஒத்திகை நடத்தி
கடைவாசல் சென்று
வண்டியை நிறுத்த
கண்டேன் ஒரு திறளான
கூட்டம்
வாங்குவோர்,
போவோர், வருவோர் எல்லாம்
கரையட்டும் எனக்
காத்துக்கிட்டிருந்தேன்
பாக்கிக்கான பணம்
வருதென எண்ணி
பார்த்தவுடனே
கடைக் காரர் அணுக
ஜென்டிலாய் ஒரு
லிஸ்டைக் கொடுத்தேன்
“ஆப் ஆன் அவர்”கழித்து
வரட்டுமா என்றேன்
லிஸ்டைப்
பார்த்தும் புரியாத நபராய்
பத்து நிமிடத்தில்
“பேக்” செய்கிறேன் என்க
அருகில் உள்ள
செடிகொடிகள் நோக்கி
அட்ராக்டிவாய்
வெய்ட்டிங்கில் இருந்தேன்
எவ்வளவோ நேரம்
பொறுத்தே இருந்தும்
எல்லோரும் போய்ச்
சேர்வதாய் இல்லை
அங்கொன்று
இங்கொன்று தனித்தே நின்று
“அடுத்த வாரம்”
“பத்து தேதி’ பதிலாய்க்கூறி
திரண்டிருந்த
கூட்டம் தின்னாய்ப் போகவும்
நபர் ஒருவர்
மட்டும் நட்பாய் பார்க்கவும்
“பணம்
கொடுக்கிறேனா’ பார்க்கிறார் போலும்
பயந்து பயந்து
ஒதுங்கியே இருந்தேன்
“சார் ரெடி”யைத்
திரும்பதிரும்பக் கேட்டும்
நபர் போகட்டும்
என “மறதி”யாய் நின்றேன்
அந்த ஆள் என்னை
அடிக்கடிப் பார்த்து
அருவருப்பாய்
கொத்திக்கிட்டிருந்தான்
மெல்ல நான்
நிலைமையைச் சொல்லி
மேலும் ரெண்டு
நாள் அவகாசம் கேட்டு
ஓனரிடமிருந்து
பொருட்களை வாங்கி
ஒரு அடி தூரம் நகர்ந்த உடனே
“பான்பராக்”
ஒன்றை கமுக்கமாய்ப் பெற்று
பார்வை பார்த்த
நபர் ஓடிக்கிட்டிருந்தான்
நினைத்துப்
பார்த்தேன் நமட்டுச் சிரிப்புடன்
“எம்பராஸ்மெண்டாய்”
இருந்தது யார் யாருக்கென?
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
Nice one..
ReplyDelete