Sunday, 9 September 2012

33. பாகிஸ்தான் பார்டர்


“எவ்வளவு தூரமிருக்கும் பாகிஸ்தான் பார்டர்
இங்கிருந்து சரியாய் பன்னிரண்டு கிலோமீட்டர்
அப்போ பார்டர் பார்த்துவிட்டு செல்லலாம்
அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்”

நாங்கள் பிஎஸ்எஃப்போ மிலிட்டரியோ அல்ல
நானொரு மதராஸி வங்கி மேலாளர்
அவரொரு மதராஸி ஆய்வு மேலாளர்
இருவரும் தமிழால் இணைந்து விட்டோம்

அன்றொரு நாள் நண்பரொருவர் வந்தார்
அவர்பெயரோ சுரீந்தர்பால் சிங்
ஆளைப்பார்த்தால் ஏழடி உயரம்
அன்பு செலுத்துவதில் தங்கமோ தங்கம்

இருந்த இடமோ இந்திய பஞ்சாப் எல்லை
பார்க்கத் தீர்மானித்தது பாகிஸ்தான் பார்டர்
எங்கள் பிளானை விவரித்து முடித்ததும்
இரண்டே செகன்ட்டில் ஓகே தந்தார்

புறப்படும் நாளில் காரொன்று வந்ததால்
நேரே அவர் இல்லம்சென்று மகிழ்ந்தோம்
கொஞ்சம் காரில் ஆற்றங்கரை அடைந்து
ஆற்றைக்கடக்க பெருந்தோணியில் பயணம்

அக்கரை அடைந்ததும் குதிரைவண்டி அழைக்க
எல்லோரும் நாங்கள் ஏறி அமர்ந்த பிறகு
குதிரை எங்களை இழுத்துச் சென்றது
ஐந்து கிலோமீட்டர் ஜட்காப் பயணம்

கொண்டுபோய் எங்களை இறக்கியும் விட்டது
இந்திய எல்லையின் எல்லைப்பகுதியில்
வந்தநோக்கம் பிஎஸ்எஃப்ல் பறஞ்சால்
அறிமுக நண்பர் தமிழ் நாட்டுக்காரர்

மகிழ்ச்சியின் மிகுதியால் பாகிஸ்தானைப் பார்க்க
அவர் உதவியை நாங்கள் நாடினோம்
அன்று தெரிந்த டெலஸ்கோப் காட்சியால்
பாகிஸ்தான் பார்டரை ஒருவழி அலசினோம்

பார்டர் டூ பார்டர் ஐந்நூறு மீட்டர் எனவும்
ஐந்நூறு மீட்டரும் நோமேன்ஸ் லேண்ட் என
நானும் கேட்டேன் மனிதர்களே இல்லையா?
புன்னகை புரிந்து அவரும் சொன்னார்

ஐந்நூறுமீட்டர் நிலத்திலும் கோதுமை விளையும்
கிராமத்திலுள்ளோர் அங்கு விளைவிப்பார்
ஐடி கார்டால் அறிந்து கொள்வோம் அவரை
மற்றோரென்றால் “கொல்”முதல் செய்வோம

கேட்ட நாங்கள் மற்றோரெனக் கூவ
தேன் தமிழ்ச்சொல்லை இங்கே கேட்பதால்
சுட்டுக் கொல்ல மனம் இல்லை எனச்
சொல்லிவிட்டு “கொல்” லெனச் சிரித்தார்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: