Wednesday, 12 September 2012

34. கண் முன்னே


வழக்கம்போல் அன்றும் வங்கிக்குச் சென்றேன்
வந்த பார்ட்டிகளை ஒரு பார்வை பார்த்தேன்
கண்ணுக்கு இளசாய் திருமண புதுசாய்
கண்டவர்தம்மை உடன் காண அழைத்தேன்

சொந்த ராஜ்ஜியம் திருவனந்தபுரம் பக்கம்
ஜோலியாய் இவ்விட கிராமவங்கி அலுவலர்
விசிட்டடித்து விசிட்டடித்து கன்னி மயங்கி
விரைவில் விவாஹம் செய்ததும் யோகம்

அவள் ஒருத்திதான் அச்சனின் வாரிசு
கூட வந்ததோ டவுரியாய் தோட்டங்கள்
காட்டுப் பகுதியில் தோட்டம் இருப்பதால்
கம்பி வேலி போட லோன் வேண்டி அங்கே

திருநெல்லிப் பகுதி யானைவனம் என்பதால்
தேடிவந்த இத்தம்பதியிடம்  சொன்னேன்
யானைக் கூட்டம் அதிகம் இருக்கும்
பார்த்துவிட்டுத்தான் லோன் தர முடியும்

கார்த்திக்குளத்தில் ஒரு நாள் காலையில்
காத்திருக்கும்படி அவரைப் பணித்தேன்
விசிட் வரும் நாளில் அவரும் இருக்க
விருப்பம் கூறி விடை பெற்றுச் சென்றார்

அந்த நாளோ ஆகஸ்ட் முப்பத்தொன்று
வருடமோ பத்தொன்பது தொண்ணூறொன்று
நன்றாவே இன்னும் ஞாபகத்தில் இருப்பது
நடக்க இருந்த ஒரு மறக்க முடியா சம்பவம்

கார்த்திக்குளத்தில் காத்திருந்த நண்பரை
கைதட்டி கூப்பிட்டு கிட்டே அழைக்க
ஜீப் விளிக்கட்டுமா போக என கேட்க
சார்ஜை முன்னிட்டு வேண்டாம் என மறுக்க

யானை பயம் உண்டாவெனத் தொடர
ஒன் பெர்சென்ட் சான்ஸ் எனப் பறைய
பைக்கில் ரிஸ்க்கில் பயணிக்க தீர்மானித்து
போகும்பொழுது சந்தோஷமாய்ச் சென்றோம்

நண்பரின் (இளம்)மனவிகொடுத்த விருந்தில்
போதுமென்ற அளவுக்கு திளைத்த நாங்கள்
தோட்டம் கண்டு குட் பை சொன்னபின்
திரும்பும்போது மணி ரெண்டு இருக்கும்

புல்லட்டில் நாங்கள் புயலாய்ப் போகையில்
பின்புறமிருந்தவர்“ பின் பக்கம்” எனக் கத்த
சட்டெனப் பிரேக்கிட்டு பட்டென நிறுத்த
யானையின் பின்பக்கம் விளக்கம் கூறி இறங்க

 நானும் கண்டபின் நடுரோட்டில் வண்டியை
அப்படியே அனாதையாய் அங்கேயே விட்டுப்பிட்டு
ஆளரவமில்லா கானகச் சாலையில்
வேகவேகமாய்ப் பின்னோக்கி நடந்து

வேர்த்து விறுவிறுத்து பயத்துடன் திரும்ப
சரசர வெனக் கூட்டமாய் யானைகள்
பத்துமீட்டர் தூரத்தில் கிராஸ் செய்து போகவே
உடல் குடல் நடுங்க இறைவனைத் துதித்தோம்

நண்பர் மட்டும் அதைப் பார்த்திராவிட்டால்
பைக்குடன் நேராய் யானையிடம் மாட்டி
நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கவே
ஜீப்பின் சத்தம் கொஞ்சம் கேட்கவே

கொஞ்சமாய் தெளிந்து நாங்கள் பார்க்கையில்
பஸ்ஸொன்று வந்து எங்களுடன் சேர்ந்து
கூட்டமாய் யானைகளை ஒருசேர ரசிக்க
பயத்துடன் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராய்

இன்றும் நண்பர் வங்கிக்கு வந்தால்
எந்தா சேட்டா ,சுகந்தன்னே! கேட்டால்
யானைக்கூட்டமும் அவர்களது தோட்டமும்
நிலைகுலை நடுங்க கண்முன்னே வரும்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: