Monday, 3 September 2012

31. பால் பண்ணை


இந்த மாதம் பால்கார்டு வாங்கலையா?
ஆச்சரியமாய் கேட்டான் அக்ரி நண்பன்
வழக்கத்துக்குமாறாய் பொய்யைச்சொல்லி
விடுதலையானேன் ஒரு ராஜ்குமாராய்

பால்கார்டு வாங்கினால் ஒரே லாபம்
பூத்துக்கு வரணுமென்ற அவசியமில்லை
கார்டு வாங்கி போடுபவனிடம் கொடுத்தால்
காலையில் வந்து கவனமாய்ச் சேர்ப்பான்

வீட்டிலிருந்தே வாங்கிக்கொள்ளும் வழியை
விரும்பாததை நான் கொஞ்சம் உணர்ந்தேன்
வங்கியில் வேலைப்பளு அதிகமிருந்தாலும்
வாங்காததுற்கு காரணம் அதுவல்ல

போடும் பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும்
பால்கார்டு வாங்க பணம் எடுத்து வைப்பேன்
போட்ட பாக்கட் அழுக்காய் இருந்தாலும்
அழுக்கை நீக்க கழுவிக்கொள்வேன்

கார்டு வாங்காததற்கு காரணமென்னவென்று
பத்தினி முதற்கொண்டு பலரும் கேட்க
உண்மையான காரணத்தை உளறிக்கொட்டி
ஊரார் முன்னால் நிற்கத் தயங்கிறேன்

பல மாதங்கள் முன்னால் வங்கிக்கு ஒருநாள்
நங்கை ஒருத்தி துணையோடு வந்தாள்
அக்ரிஎன்னைப் பார்ப்பதற்கு முன்னவே
ஆபீஸ்பேச்சலர்ஸ் அவளைப் பார்த்து

மந்த்ரா மேட்டர்ஸ் பலமாக இருந்ததால்
நடமாடும் பால்பண்ணை பெயரைச் சூட்ட
என்னிடம் பேசி அவள் போன பின்னர்
எல்லோரும் ஆவலாய் என் டேபிளைச் சூழ

பால்பண்ணை வைக்க லோன்வேண்டி அவள்
புரப்பொஸல் கொடுத்திட்டுப் போகிறாளென்க
ஆபீஸ் நண்பர்கள் மகிழ்ச்சியில் சேர்ந்து
ஒரே குரலாய் ஓகே சொல்லுங்க சொல்ல

தொழில் உறவு மற்றும் கோப்பரேஷன் கருதி
மேலிடத்தில் அளந்து ஒப்புதல் வாங்கி
கறவைமாடுகள் பத்து கன்றுக்குட்டி பத்தென
ரூல்ஸ் பிரகாரம் பண்ணை வைத்துக் கொடுக்க

வங்கிக்கு சிலநாள் வந்துகொண்டிருந்த“பண்ணை”
வராமலே தொடர்ந்து நின்று போகவே
நின்றது பாலா? நின்றது பண்ணையா? வென
கிளைகேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல்

தத்தளித்த நான் தடுமாறி ஒரு நாள்
இப்பூத்தில் அவள் இருப்பதைக் கண்டு
ஆச்சரியத்தில் பிரமிப் பால்பண்ணை கேட்க
“ஓடிவந்த” அவளால் நின்றுபோனதென்க

வாங்கின கடனை வட்டியும் முதலுமாய்
அடைக்கிறேன் என அவள் உறுதியதால்
தினமும் வந்து லிட்டர் பால் வாங்கி
வங்கியின் பணத்தை வசூலிக்கப் பார்க்கிறேன்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: