Thursday, 30 August 2012

30. லவ் மேரேஜ்


தெருவெல்லாம் மழைபெய்து தண்ணீர்
தாரைதாரையாய் அவள்முகத்தில் கண்ணீர்
கணவன் பிரிந்த சோகத்தில் அவளும்
கடன்வசூல் செய்யும் வேகத்தில் நானும்

கேரள கிராமத்து தனி வீட்டில் ஒருநாள்
கேட்டுக்கிட்டிருந்தேன் அவளின் கதையை
பெண்ணின் இளமை இருபத்து ஐந்தாம்
பெற்ற பிள்ளைகளும் அடுத்தடுத்து ஐந்தாம்

அவள் புருஷன் வழிமுறையாய் பெற்ற
அம்பது சென்ட் குன்றின் நிலத்தில்
ரப்பர்தோட்டம் வைக்க வாங்கிய கடனை
வசூலிக்கும்பொருட்டு நானங்கு சென்றேன்

அலைந்தலைந்து அட்ரஸைத் தேடி
அக்குடிலில் அடி எடுத்து வைத்தேன்
பார்த்தவுடன் அசல் வட்டி சொன்னேன்
கேட்டவுடன் பீரிட்டு அழுதாள்

பரிதாபத்தில் மனமிரங்கி நின்று
வரலாற்றை அவள் படிக்கக் கேட்டேன்
விவாஹம் லவ் மேரேஜ் என்றாள்
சொந்தபந்தம் யாருமில்லை சொன்னாள்

ஆரம்ப காலம் நன்றாய்ப் போக
அடுத்தடுத்து பெண்களாய்ப் பிறக்க
மோகம் கொஞ்சங் கொஞ்சமாய் குறைய
கஷ்டங்கள் அடுக்கடுக்காய் நிறைய

லாரி ஓட்டி லவ் பண்ணிய கணவன்
சொல்லாமல் ஒருநாள் மேரியோடு ஓட
இவள்மட்டும் குழைந்தைகள் லோடுடன்
ஆக்ஸிடெண்ட் லாரியாய் அங்கே கிடக்க

என்று வருவான் ஆசை கணவன்
ஏங்கி ஏங்கி தவியாய் தவிக்க
நானங்கு கடன் கேட்டு சென்றதும்
அவள் சோகம் பன்மடங்காய் பெருக

காற்றுகாற்றாய் தினந்தோறும் அடித்து
மழைமழையாய் இரவெல்லாம் கொட்டும்
காட்டில் இருந்த அக் குச்சு வீட்டில்
குழைந்தைகளுடன் அவள்படும் பாட்டை

நினைத்துப் பார்த்தேன் நெஞ்சில் ஈரமாய்
வங்கிக் கடன் வட்டி வசூல் மறந்தேன்
கண்டிப்பாய் உன் கணவர் வருவார்
காத்திரு நம்பிக்கையுடன் சொன்னேன்


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: