மச்சினச்சி வனப்பைப் பற்றி
மனதில் நான் உவகை கொண்டு
கவி எழுதத் தொடங்கும் முன்னே
காலிங் பெல் சத்தம் கேட்க
வருபவர் யாரோ வென்று
வண்ணமய கனவுகள்
கண்டு
எழுதுவதைக்
கொஞ்சம் நிறுத்தி
என் வீட்டுக்
கதவைத் திறக்க
பச்சைக்கலர் சுடிதார்
அணிந்து
பகட்டுடன் நல்
மேக்கப் செய்து
காண்போர்க்கு
குளிர்ச்சியைக் கூட்ட
கவனமுடன் அழகைக்
கூட்டி
மென்பாதம்
தரையைத் தொட்டும்
மெட்டி ஒலி
சிறிதாய்க் கேட்டும்
பரவசத்தை
அளவாய்க் கோர்த்து
பாவை அவள்
ஹாலினுள் நுழைந்தாள்.
கற்பனையில்
சுகமாய் வந்த
கனவுக்கன்னி நேரே
வந்தால்
நெஞ்சம் அதன்
வேலை மறந்து
தஞ்சம்எனப்
பார்வையில் தங்கும்
என் கதியும்
இதுபோல் ஆகி
இவளை நான்
கூர்ந்து நோக்க
காந்தம் கண்ட
இரும்பைப் போல
கவனமெல்லாம்
சிதறக்கண்டேன்.
பூங்குயிலாள்
பார்வை புரிந்து
புன்னகையை
வெகுவாய் வீச
ஆழ்மனதில்
ஏற்பட்ட கிறக்கம்
அதிவிரைவில்
மல்டிபில் ஆகி
இதயத்துடிப்பை
எஸ்கலேட் பண்ண
இவளழகால்
இம்சைகள் கூட
கணநேரக் காமிராக்
கண்ணால்
கவர்ச்சிகளை
லேசாய் தொட்டேன்.
பிரம்மனவன்
படைப்புக் கலையில்
பெரியதோர் பட்டம்
பெறவே
புராசக்ட்
வொர்க்காய் இவளைப் படைத்து
பூமிதனில் உலவ
விட்டானோ
காமனவன்
அசைன்மென்ட் தந்து
கன்னி இவளைப் படைக்கச்சொல்லி
பிரம்மனிடத்தில்
கத்தியைக் காட்டி
பெரிதளவில் மிரட்டிருப்பானோ!
அங்கமெல்லாம அழகாய்
அளவாய்
அற்புதமாய்
மார்பில் பதிய
அதற்கிணையாய்
மற்றவை யாவும்
அளஅளவாய்த் தானே
அமைய
சொர்க்கம் ஒரு
சாட்டிலைட் வடிவில்
சுகத்தைத் தான்
டிரான்ஸ்மிஸன் செய்ய
செக்கனிவன் டிவி
ஹார்ட்டும்
சிலைபோல் அதை
ஸ்டில் பண்ணத்தோண
உணர்ச்சிகள்
புயலாய் மாற
உணர்வுகள் போர்
செய்யத் தூண்ட
கள்ளம் செய்யும்
மிதப்பில் நானும்
கவனத்தின்
பேசிக்ஸ் மறந்தேன்
தூண்மறைவில்
நின்றிருந்த மனைவி
துரிதத்தில்
சினத்தைக் கூட்டி
முகம் வடியும்
ஜொள்ளைப் பார்த்து
முகம் நோக்கும்
பாதையை மரித்தாள்.
சட்டென்று
குற்றத்தை உணர்ந்து
சடாரென
மாற்றத்தைத் தழுவ
வாடிப்போன
நாற்றைப் போல
வாட்டைத்தை
முகத்தில் தேக்கி
அக்கறையாய்
இவளிடம் கேட்டேன்
அவள் வந்த காரணம்
பற்றி
அப்புறம் பேசறேன்
என்றாள்
அர்த்தம்தான்
என்னவெனப் பயந்தேன்.
இருபதுநிமிட
வெய்ட்டிங்க் பிறகு
என்னவள் என் இடம்
வந்தாள்
என்றுமில்லா
புன்னகை தாங்கி
இவளுக்குக்
கல்யாணம் என்றாள்
கேட்டவுடன்
அதிர்ச்சியானேன்
அதிர்ஷ்ட நபர்
யாரெனக் கேட்டேன்
மாமன் மகன்
சுந்தரம் என்று
மற்றுமொரு
இடியைப் போட்டாள்.
ஐய்யோ அவன்
ஒல்லிப் பிசாசு
அவனுக்கா இவ
மனைவியாவது
போயும் போயும்
இந்தக் கிளியை
ஒரு புறம்போக்கா
தட்டிக்கொள்வது
சொந்தம் என்ற
பெயரில் செய்யும்
சம்பந்தத்தை அறவே
வெறுத்தேன்
இருப்பினும்
........ சுகத்திற்காக............
கையைப் பற்றி
கங்கிராட்ஸ் செய்தேன்.
KAVIGNAR MILLENIUM VIGNESHIN
THAMIZH KAVITHAIKAL NOORU
kavimivi, thangal oru kavimani, thamizh mannai vitu vanthu pala dinamakiya enakku, thamizh paal kudithathu pol erunthathu. ungalin 42 vathu kavithai nammai 40 varudam pennai kondu sendrathu. vazhga thangalin thamizh vazhamai, nanban, jp..
ReplyDelete