Thursday, 25 October 2012

40. ஆம்வே ஹமாரா வே


அங்குமிங்கும் அலைந்து திரிந்து
ஆம்வே பற்றி ஆவலுடன் உரைத்தால்
ஆமெனச்சொல்லி முன்வர யாரும்
அதிகப்படியாய் தயாராய் இல்லை
ஏனடா ஏஜன்ஸி எடுத்தோம்
எதற்கடா வம்பில் குதித்தோம்
சம்பளமே போதுமென்றிருந்தால்
சராசரியாய் வாழ்க்கை போகும்

எண்ணியது எந்தன் மனது
அலறியது எதிர்காலம் அறிந்து
பணிவுடன் பின்னடைவு பற்றி
பரமாத்மா அப்லைனிடம் கேட்க
சோர்வுகண்டு துவளவேண்டாம்
சொல்லியபடி சுற்றை மேற்கொள் என
தினம் தோறும் வீட்டிற்கு வந்து
தெம்பினை நியூட்ரலைட்டாய் தந்து

உற்சாகமாய் இறக்கியும் விட்டார்
உறக்கத்தினை நீக்கியும் விட்டார்
கடுமையாய் போராடச்சொல்லி
கதைகதையாய் எடுத்துச்சொன்னார்
கேட்டுக்கொண்டு மனதைத் தேற்றி
கேள்விகளை எனக்குள் கேட்டேன்
பதில் வர தாமதமறிந்ததும்
பக்குவமாய் கிடப்பில் போட்டேன்

பழைய பிரண்ட் மனநிலை பற்றி
பரமாத்மா தெரிந்துகொண்டு
அவருடைய அப்லைன்களையெல்லாம்
அணி அணியாய் அழைத்துவந்தார்
ஒவ்வொருவரும் லெக்சர் கொடுத்து
ஒருவழியாய் குழப்பத்தை நீக்கி
செய்யச்சொல்லி தூண்டில் போட்டு
“செய்கிறேன்” பிடித்துச் சென்றார்

இன்னும் இவர்கள் விடுவதாய் இல்லை
இனிமேல் நாம் செய்யத்தான் வேண்டும்
உட்கார்ந்திருந்தால் பயனொன்றும் இல்லை
ஊர்சுற்ற கிளம்பத்தான் வேண்டும்
படிப்படியாய் தெளிவினைப் பெற்று
அடிப்படையான லிஸ்டைப் போட்டேன்
ஐநூறைத் தாண்டவேண்டுமென
பேசிக்கொண்டதை நினைவில் கொண்டேன்

எழுதிமுடித்து டோட்டலைப் பார்த்தேன்
எழுநூற்றைம்பது என்று வந்தது
இலேசாக புன்முறுவல் பூத்தேன்
களத்தில் இறங்க எத்தணித்தது
ஒழுங்காகப் பிளானைப் போட்டேன்
ஒவ்வொருவராய் பார்க்கத் துணிந்தேன்
ஓடுகளத்தில் இறங்கி ஓட
ஒவ்வொருநாளும் ரிகர்ஸல் செய்தேன்

முதலாவதாய் முக்கியப் பிரண்டென
மூர்த்தி என்ற நபரைப் பார்த்தேன்
ஆசை தீர பேசி முடித்து
“அப்புறம் பார்க்கிறேன்” சொல்லி முடித்தான்
இரண்டாவதாய் இன்னுமொரு நபர்
எடுப்பார் என மோகம் கொண்டு
இரவுபகலாய் தொலைபேசியில் தொடர்ந்து
இல்லை என்ற பதிலைப் பெற்றேன்

மூன்றாவது நண்பரிடம் சென்று
முழுமூச்சாய் எடுத்துச்சொல்லி
முடியாது எனப் பதிலைக்கேட்டு
மேல்மூச்சு வாங்கக் கண்டேன்
பெண்மணி ஒருவர் எடுப்பாரென
என் மனைவியும் பிராமிஸ் செய்ததை
நம்பி நானும் அவரைப் பார்க்க
நபர் புத்திசாலி எனப் பெயரும் எடுக்க

வெறுத்துப்போய் வீட்டுக்கு வந்தால்
வீட்டுவாசலில் பரமாத்மா கண்டேன்
நிலைமை என்னவென்று கூறச்சொல்லி
நெடுநேரம் தொந்தரவு செய்தார்
முகத்திலே கடுப்பைத் தேக்கி
முதன்முறையாய் முறைத்துப் பார்த்தேன்
மனிதனவர் பார்வை புரிந்து
“மறுபடி வருகிறேன்” என ஓடி மறைந்தார்

இது நமக்கு ஒத்துவருமா வென
இன்னமும் நான் டிபேட் செய்கிறேன்
எண்ணிஎண்ணி சிந்தனை கெட்டு
உறக்கம்வரவும் முடங்கிக்கொள்கிறேன்
கண்டதொரு கனவுகள் எல்லாம்
கண்கள் உருட்டிச் செய்யச் சொல்லி
வந்த தூக்கத்தை தவணையாய் மாற்றி
வராத நபர்களை காணச்சொல்ல

ஐந்தாவதாய் ஒருவரிடம் சென்று
“ஆம்வே” பற்றி செய்யச் சொன்னேன்
அவர், புதியதாய் இருக்கெனச்சொல்லி
பத்துநிமிட அவகாசம் பகிர்ந்தார்
செய்வார் என எதிர்பார்த்து நானும்
சிந்தனையை முடுக்கிவிட்டேன்
கொஞ்சநாள் பொறு எனச் சொல்லி
நெஞ்சினிலே வேதனை தந்தார்

அடுத்த நாள் குளித்து முடித்து
ஆம்வேக்கு டாட்டா சொல்ல துணிய
உள்மனதில் எழுந்த ஓலம்
ஒருவரியில் கீதாசாரமாய்த் தொனிக்க
ஆயிரம் பேர் நோ சொன்னாலும்
“ஆம்” சொல்லும் நபருக்கு காக்கச்சொல்ல
ஆம்வே “ஹமாரா”வே சொல்லி
தோல்வி என்னும் சொல்லை மறந்தேன்

KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

Thursday, 18 October 2012

39. எம்மதமும் சம்மதம்


இருவருக்கும் இடையேயுள்ள
இடைவெளியை குறைத்துவிட்டால்
கண்ணு மூக்கு காது வைத்து
கண்டபடி பேசிச் சென்ற
எட்டப்பன் பரம்பரையான
குட்டப்பன் என்ன ஆவான்
எண்ணிய எல்லோரும் சேர்ந்து
உபாயம் ஒன்றை உடனே தேட

மானந்தவாடி நகரை அடுத்து
கம்மன என்ற கிராமத்திலிருந்த
லவ் பண்ணிய அய்யர் பையனுக்கும்
“நன்” ஆகிய கன்னி மேரிக்கும்
பெற்றோரின் உரிமைக்குரல்தான்
எதிர்ப்புக்குரலாய் என்றும் ஒலிக்க
சமாதானமாய் அவர்களை மடக்கி
சரி பண்ண எங்களை அழைக்க

தெரிந்தவர்களிடம் பையனைப்பற்றி
தெரியா விவரம் முழுவன அறிந்தோம்
பையன் மிகவும் சாது என்றும்
ஒழுக்கத்தில் மேன்மை என்றும்
குடும்பம் சிறியது என்றும்
கூடப்பிறந்தோர் யாருமில்லை என்றும்
காதல் வட்டத்தில் நாங்கள் அறிந்தது
பையன் ரொம்ப சின்சியர் என்று

பக்கத்து வீட்டு பிலிப்போஸுக்கு
பிறந்ததெல்லாம் பெண்கள்தானே
மூத்தபெண்ணை கன்னியாய் ஆக்கி
முடிந்தவரை ஊட்டிக்கு துரத்த
மூடப்பட்ட அவளின் காதல்
நம்பியினால் மீண்டும் திறக்க
“நன்”னாகியும் அவளது எண்ணம்
நம்பியிடமே தினமும் லயிக்க

கன்னிஸ்தீரியின் காதல் வசத்தால்
கண்டவர்கள் குறைகள் பேச
நம்பி அங்கே எடக்கெடக்கச் சென்று
நங்கை அவளைத் தனிமைப் படுத்தி
துறவறத்தை விட்டெறிந்து
இல்லறத்திற்கு வந்துவிடு என்க
அவள் மிகவும் குழப்பமடைந்து
“அச்சனி”டம் முழு விவரம் சொல்ல

எண்ணம்அதுவாய் இருந்துகொண்டிருந்தால்
கன்னிப்போர்வையை கழட்டிவிடென
மடத்தில் உள்ள அச்சன் அவளை
கன்னிஸ்திரியிலிருந்துநார்மல்ஸ்திரியாய்ஆக்க
நம்பி அவளை அழைத்துக்கொண்டு வந்து
நண்பி வீட்டில் இருக்கச்சொல்ல
அவனும் அடிக்கடி பார்த்து
ஊர்வம்புக்கு அடித்தளம் போட்டான்

பிரச்சினை இவ்வளவு பெரியதாகி
பஞ்சாயத்தார் தீர்ப்புக்குச் செல்ல
நம்பி அவன் பயந்து போயி
நண்பர்களான எங்களிடம் பறைய
சுமுகமான தீர்வுகாண
சொந்தமாய் நாங்கள் யோசிக்கத்தொடங்கி
நம்பியையும் மேரியையும் கூட்டி
நல்ல ஒரு விவாதம் செய்தோம்

அடுத்த நாள் அய்யரின் உதவியால்
மேரி ஒரு தாரிணி யாகி
கிரிஸ்தியானிட்டியை துறந்துவிட்டு
இந்து மதத்தைத் தழுவிக்கொண்டாள்
நண்பர்களெல்லாம் சாட்சியாய் நின்று
மானந்தவாடி ரெஜிஸ்டர் ஆபீஸில்
பதிவு திருமணம் செய்து வைத்து
பத்திரமாய் அனுப்பிவைத்தோம்

பெண்ணுடைய அச்சனிடத்தில்
பெண்ணை நீ மறந்துவிட்டாய் எனவும்
என்று நீ அவள் விருப்பம் மீறி
நன்னாக மாற்றினாயோ
அன்றே அவள் உன் பெண் அல்ல!
இன்று நீ நினைத்துக்கொள்ளென
அதிவிவரமாய் அவரிடம் சொல்லி
அவர் வாயை மெல்ல அடக்கினோம்

நம்பி அவன் தந்தையிடமோ
நம்பி இருப்பதோ ஒரே பிள்ளை
அவன் விருப்பம் அவளாய் இருந்தால்
தாரிணியை ஆசாரமாய் ஏற்று
தோஷத்துக்கு பரிகாரம் தேடி
சாஸ்திரத்தை நோக்குவது போல
இதற்கும் ஒரு வழிவகை கண்டு
இருவரையும் வாழவிடுங்கள் என்றோம்

இன்று நான் போய்ப்பார்க்கையில்
எல்லாமே நினைவில் வரவும்
நம்பி அவன் இரு இளசுகளும்
தாத்தாபாட்டியுடன் ஒட்டி உறவாட
எல்லாமே இன்புற்றிருக்கவே
எம்மதமும் சம்மதம் தருமென
மனிதகுல தத்துவத்தை நானும்
மறக்காமல் ஓதிவிட்டு வந்தேன்


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU