இருவருக்கும் இடையேயுள்ள
இடைவெளியை குறைத்துவிட்டால்
கண்ணு மூக்கு காது வைத்து
கண்டபடி பேசிச் சென்ற
எட்டப்பன் பரம்பரையான
குட்டப்பன் என்ன ஆவான்
எண்ணிய எல்லோரும் சேர்ந்து
உபாயம் ஒன்றை உடனே தேட
மானந்தவாடி நகரை அடுத்து
கம்மன என்ற
கிராமத்திலிருந்த
லவ் பண்ணிய அய்யர்
பையனுக்கும்
“நன்” ஆகிய கன்னி
மேரிக்கும்
பெற்றோரின்
உரிமைக்குரல்தான்
எதிர்ப்புக்குரலாய் என்றும்
ஒலிக்க
சமாதானமாய் அவர்களை மடக்கி
சரி பண்ண எங்களை அழைக்க
தெரிந்தவர்களிடம்
பையனைப்பற்றி
தெரியா விவரம் முழுவன
அறிந்தோம்
பையன் மிகவும் சாது என்றும்
ஒழுக்கத்தில் மேன்மை
என்றும்
குடும்பம் சிறியது என்றும்
கூடப்பிறந்தோர் யாருமில்லை
என்றும்
காதல் வட்டத்தில் நாங்கள்
அறிந்தது
பையன் ரொம்ப சின்சியர்
என்று
பக்கத்து வீட்டு
பிலிப்போஸுக்கு
பிறந்ததெல்லாம் பெண்கள்தானே
மூத்தபெண்ணை கன்னியாய் ஆக்கி
முடிந்தவரை ஊட்டிக்கு
துரத்த
மூடப்பட்ட அவளின் காதல்
நம்பியினால் மீண்டும்
திறக்க
“நன்”னாகியும் அவளது எண்ணம்
நம்பியிடமே தினமும் லயிக்க
கன்னிஸ்தீரியின் காதல்
வசத்தால்
கண்டவர்கள் குறைகள் பேச
நம்பி அங்கே எடக்கெடக்கச்
சென்று
நங்கை அவளைத் தனிமைப்
படுத்தி
துறவறத்தை விட்டெறிந்து
இல்லறத்திற்கு வந்துவிடு
என்க
அவள் மிகவும் குழப்பமடைந்து
“அச்சனி”டம் முழு விவரம்
சொல்ல
எண்ணம்அதுவாய்
இருந்துகொண்டிருந்தால்
கன்னிப்போர்வையை
கழட்டிவிடென
மடத்தில் உள்ள அச்சன் அவளை
கன்னிஸ்திரியிலிருந்துநார்மல்ஸ்திரியாய்ஆக்க
நம்பி அவளை அழைத்துக்கொண்டு
வந்து
நண்பி வீட்டில்
இருக்கச்சொல்ல
அவனும் அடிக்கடி பார்த்து
ஊர்வம்புக்கு அடித்தளம்
போட்டான்
பிரச்சினை இவ்வளவு
பெரியதாகி
பஞ்சாயத்தார்
தீர்ப்புக்குச் செல்ல
நம்பி அவன் பயந்து போயி
நண்பர்களான எங்களிடம் பறைய
சுமுகமான தீர்வுகாண
சொந்தமாய் நாங்கள்
யோசிக்கத்தொடங்கி
நம்பியையும் மேரியையும்
கூட்டி
நல்ல ஒரு விவாதம் செய்தோம்
அடுத்த நாள் அய்யரின்
உதவியால்
மேரி ஒரு தாரிணி யாகி
கிரிஸ்தியானிட்டியை
துறந்துவிட்டு
இந்து மதத்தைத்
தழுவிக்கொண்டாள்
நண்பர்களெல்லாம் சாட்சியாய்
நின்று
மானந்தவாடி ரெஜிஸ்டர்
ஆபீஸில்
பதிவு திருமணம் செய்து
வைத்து
பத்திரமாய் அனுப்பிவைத்தோம்
பெண்ணுடைய அச்சனிடத்தில்
பெண்ணை நீ மறந்துவிட்டாய்
எனவும்
என்று நீ அவள் விருப்பம்
மீறி
நன்னாக மாற்றினாயோ
அன்றே அவள் உன் பெண் அல்ல!
இன்று நீ நினைத்துக்கொள்ளென
அதிவிவரமாய் அவரிடம் சொல்லி
அவர் வாயை மெல்ல அடக்கினோம்
நம்பி அவன் தந்தையிடமோ
நம்பி இருப்பதோ ஒரே பிள்ளை
அவன் விருப்பம் அவளாய்
இருந்தால்
தாரிணியை ஆசாரமாய் ஏற்று
தோஷத்துக்கு பரிகாரம் தேடி
சாஸ்திரத்தை நோக்குவது போல
இதற்கும் ஒரு வழிவகை கண்டு
இருவரையும் வாழவிடுங்கள்
என்றோம்
இன்று நான்
போய்ப்பார்க்கையில்
எல்லாமே நினைவில் வரவும்
நம்பி அவன் இரு இளசுகளும்
தாத்தாபாட்டியுடன் ஒட்டி
உறவாட
எல்லாமே இன்புற்றிருக்கவே
எம்மதமும் சம்மதம் தருமென
மனிதகுல தத்துவத்தை நானும்
மறக்காமல் ஓதிவிட்டு
வந்தேன்
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
No comments:
Post a Comment