கட்டாயம் திங்கட்கிழமை
காலையில்
வங்கிக்கு
வந்துவிடுங்க
கைகொடுத்துப்
போகையில் கிளையும்
கண்டிப்புடன்
மீண்டும் சொல்ல
விடுப்பு எடுத்து
மூணு நாளில்
வேலூர் போய்
வந்துவிடலாமென
வருகிறேன்
வருகிறேன் சொல்லி
வங்கிக்கு விடை கொடுத்தேன்
போகும்போது
காலிக்கட் சென்று
காட்பாடிக்கு
ரயிலேறிச் சேர்ந்தேன்
பேமிலியை கண்ணால்
கண்டு
மன உவகை
கூடக்கண்டேன்
எத்தனை நாள்
வராமலிருந்து
இப்பொழுதுதான்
வருகிறீர்களென்று
மனைவி சொன்ன
வார்த்தைகள் மட்டும்
மனமகிழ்ச்சி
ஏற்படுத்தவில்லை
முடிந்தவரை
மூணுநாள் லீவை
முதலில் நான்
சொல்லாமலிருந்தேன்
சந்தோஷமாய்
மனையாள் மக்களுடன்
மொத்தநாட்களைக்
கழித்தபின்னே
ஞாயிறு மாலை
ஞாபகம் வந்தது
கிளை சொன்ன
கண்டிப்பு பேச்சு
மெல்ல மனைவியிடம்
சொன்னேன்
ஊருக்குப்
போகணுமென்று
முதலில் அவள்
கோபப்பட்டாலும்
முடிவில் ஓகே சொல்ல
வேலூர் பஸ் நிலையம்
வந்து
மைசூருக்குப்
பஸ்ஸைப் பிடித்தேன்
காலை மணி
ஆறுக்குள்ளே
மைசூர் நகரம்
வந்து சேர
ஆறுமணிக்கு
புறப்படும் பஸ்ஸும்
அங்கிருந்து
நகரத்தொடங்க
ஆபீஸ்போகவேண்டி
அவசரத்தில் நானும்
ஓடிப்போய்
ஏறிக்கொண்டேன்
டிரைவர் கேபின்
காலியாகவும்
பாஸஞ்சர் கேபின்
புல்லாகவும்
மெல்லப்போய்
டிரைவரிடம் சொல்லி
கேபினில் இடம் கொடுக்கக்
கேட்டேன்
ரிடையராகப் போற
டிரைவர் ஆதலால்
சம்திங்க்
வேண்டுமென கேட்டார்
ஏறியிருப்பதோ
எக்ஸ்பிரஸ் பஸ்
எப்படியும் நைன்
தர்ட்டிக்குள் போகும்
செலவைப்
பார்க்காமல் பர்ஸை எடுத்து
இருபது ரூபாய் நோட்டை
நீட்ட
அங்கிருந்த ஒரு
அழுக்குப் பெஞ்சில்
அமரும்படி சைகை
காட்ட
பஸ் பயணம் வசதி
இல்லாமல்
பஸ்ஸும்
ஆர்டினரியாய்ச் செல்ல
ஒரு கிராமம்
வந்தவுடனே
ஓடி வந்தாரொருவர்
நான்கு ஆட்டுடன்
டிரைவரைத்
திருப்தியாய் கவனித்து
அவருக்கும்
ஆட்டுக்கும் சீட் வாங்கினார்
நான் கொஞ்சம்
ஓரமாய் ஒதுங்கி
ஆடுகள் இருக்க
வசதியைச் செய்து
டைமுக்குப்
போகுமா கவலையில்
ஆடு போல் ஆட்டோடு
இருக்க
சிறியதொரு டவுன்
வந்தபின்னர்
ஆடுகள்
என்னைத்தவிர்த்து இறங்க
ஒரு ஆள்
டிரைவரிடம் வந்து
மெதுவாய் ரகசியம்
பேச
அடுத்த
ஸ்டாப்பில் ஏறினதய்யா
கட்டுகட்டாய்
விறகு கட்டைகள்
அதுவும்
இறங்கினதய்யா
அடுத்த வில்லேஜ்
வந்த உடனே
சில தூரம்
ப்ரீயாய்ச் சென்றபின்
சிறு ஊர்
எங்களைத் தேட
மூட்டைமூட்டையாய்
அரிசி மூட்டைகளை
முதியவர் ஒருவர்
பஸ்மேல் போட
பத்து
கிலோமீட்டர் சென்றபின்னர்
பஸ் கொஞ்சம்
தயங்கி நிற்க
டிரைவர் கையில்
திணித்த நூறால்
தார்ரோட்டிலிருந்து
மண்ரோடு இறங்க
அஞ்சு
கிலோமீட்டர் ஊர்ந்துசென்று
அவர் மூட்டைகளை
இல்லத்தில் போட்டு
பஸ் மீண்டும்
திரும்பிவந்து
தான் போகும் தடத்தில்
ஏற
ஒருவழியாய்
மானந்தவாடியை
பதினொன்றுக்குள்
லேட்டாய் எட்டி
கிளை கேட்ட
கேள்விகளுக்குப்
பதில்கூறாமல்
பேங்கில் நுழைந்தேன்
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
No comments:
Post a Comment