சேலத்துக்கு நான் ஒருநாள்
சிக்கனமாய் பயணிக்க
காசுபோதா காரணத்தால்
கவலையுடன் செலவு செய்ய
முன்னிருந்த சீட்டிலுள்ள
மேன்மகனும் முகம் காட்ட
கண்டுகொண்டேன் அவனை நான்
கல்லூரித் தோழனென்று
சந்தோஷ மிகுதியாலே
சம்பாஷணை தொடர்கதையாய்
கல்லூரி நாட்களெல்லாம்
காட்சிகளாய் டெலிவிஷனாய்
நான் புகழ்ந்தேன் அவன்
மகிமை
நட்புக்கவன் தந்த பெருமை
கூட்டாளியின் “பார்ட்டி”களை
கூர்மையுடன் நினைவூட்ட
நான் இருக்கும் நிலை
குறித்து
நண்பனவன் விசாரிக்க
மேன்மையால் நான் பெற்ற
மேலாளர் பதவி பற்றி
பெருமையாய் அவனிடத்தில்
பீற்றிக்கொண்டு நான் தொடர
சுய நினைவில் பொறிதட்டி
செல்லும் விவரம் நான் கேட்க
குடும்ப சகிதம் வருவதாக
“குட்டி”ரெண்டு இருப்பதாக
பிடித்த சீட்டை விட்டதினால்
பெண்டு பிள்ளை “பேக்”கினிலே
கூறிக்கொண்டு அவனும் வர
“ஜெர்க்”ஆயி பஸ்ஸும் நிற்க
சுற்றுமுற்றும்
பார்த்துவிட்டு
“ரெஸ்டாரெண்ட்” என உணர
“லஞ்ச்”எடுக்க வாராய் என
நண்பனும்தான் விரும்பி
அழைக்க
“ஃபேமிலி”யாய் வரானாகையால்
“பில்” கொடுப்பான் என
நினைக்க
பத்தினியிடம் என்னைப்பற்றி
பதவிசாய் உயர்வு சொல்லி
பர்ஸிலிருந்த ஒரே நூறுக்கு
“பாம்ப்”இட்டான் பழைய
பிரண்ட்.
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU