Sunday, 24 June 2012

4. நான் ஜெயிப்பேன்

                      
 
விநாயகனே விநாயகனே
விடை தேடி வணங்குகிறேன்
சுமைதாங்கி நானில்லை
சுமை கூடிப் போச்சுதப்பா !

கஷ்டங்கள் நீங்கவேண்டும்
கவலைகள் குறையவேண்டும்
கூடுதலாய் கஷ்டங்களில்
“குபேரனாய்” ஆக்கிடாதே !

எங்கெங்கு சென்றிடினும்
வெறுங்கையே தினம் மீதி
என்னென்ன செய்தாலும்
அவச்சொல்லே வரும் பீதி

பாவத்தின் பேருருவம்
பார்வையிலே தெரியுதப்பா
நான் செய்த பாவம்தான்
நானின்னும் அறியவில்லை

வாழ்க்கையில் போராட்டம்
வருவது   சகஜம் தான்
போராட்டமே வாழ்க்கையென்றால்
போர்க்களமும் வெறுத்தொதுக்கும்

தாங்காது தாங்காது
தனிமனிதன் சிறு இதயம்
ஏற்காது ஏற்காது
இன்னலுற்ற என் மனமும்

கண்களில் நீர் கொண்டு
கரங்களை மேலுயர்த்தி
கணபதி சரணமென்று
கவலையோடு வேண்டி நிற்க

எண்ணங்கள் தோன்றுதய்யா
இறைவனே முதன்மையென்று
இடுக்கண்கள் யாவும் தீர
எக்கணமும் பக்தியென்று

தீர்க்கமுடன் நானிருந்து
திறன்பட திட்டமிட
துயர் துடைக்கும் திக்குகளை
தும்பிக்கையான் தந்திடுவான்

வாழ்வினில் ஏற்றம் பெற்று
வளமுடன் நானிருப்பேன்
துளிர்த்த இந்நம்பிக்கைக்கோட்டின்
துணையோடு நான் ஜெயிப்பேன்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU






No comments:

Post a Comment