Saturday, 23 June 2012

3. தேறிவிடு பிணி / பணியில்

              
கோவை மாநகரில்
கூட்டுக்கு இலக்கணமாய்
அஸ்வினிக்கு ஸ்வீதாவாய்
அன்புமங்கை நீயிருந்தாய்

பறவைபோல் வலம் வந்தாய்
பார்ப்பவரின் மனம் கவர்ந்தாய்
நட்புக்கு இலட்சணமாய்
நங்கை பலர் நண்பியானார்

அன்றொரு நாள் இப்பொழுதில்
ஆர்வமுடன் வார்த்தையோட
சேர்ந்ததிங்கே உன் செய்தி
சுகமில்லைஎனும் துர்ச்செய்தி

கேட்டதும் திடுக்குற்றோம்
கேள்விகளால் மனம் பதைத்தோம்
ஏன் என்ற காரணத்தை
கேட்டுவர துடிதுடித்தோம்

உன்னில்லம் சேர்ந்தபின்னே
உறவினரை கண்டணுகி
விழிகளால் வினா எழுப்பி
விடைகளால் சோர்வுற்றோம்

கணபதி புறநகரில்
மருத்துவத்தில் பெயர் பெற்ற
தனியார் நல மனையில்
பிணியோடு நீயங்கே

சேர்ந்துள்ளாய் என்ற செய்தி
செவிகளைத் துளைத்தெடுக்க
புறப்பட்டோம் உடன் காண
தடைபட்டோம் காரிருளால்

என்ன செய்ய என்ன செய்ய
என்றெண்ணி ஏங்கி நிற்க
இறைவனைத்தான் நாம் நினைத்தோம்
நோய் தீர்க்க வேண்டி நின்றோம்

பள்ளி செல்லும் இவ்வயதில்
படிப்புச்சுமை கூடிவரும்
பன்னிரண்டில் செல்வதென்றால்
பொறுப்பு மிக்க காலமன்றோ !

நங்காய் நீ இன்று
நலமின்றி வாடுவதேன்?
நம்பிக்கை துணை கொண்டு
தேறிவிடு பிணி/பணியில்



KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

No comments:

Post a Comment