Saturday, 23 June 2012

1.சுவாசக் காற்று



தங்கத் தமிழ் மொழியில்
தரண் போற்றும் சொற்கள் பல
வார்த்தைகளாம் வார்த்தைகளாம்
வாய் மணக்கும் வார்த்தைகளாம்

எண்ணிலடங்கா எழுத்தில் சேரா
நாட்டுப்புற வார்த்தைகளை
கோர்த்தால் குவித்தால்
வருபவையோ பல கோடி!

சிறுவர்க்கும் வார்த்தைகளாம்
சிறாருக்கும் சொற்றொடராம்
இளைஞருக்கும் இனிப்பவைதான்
எல்லோரும் களிப்பவைதான்

பல உருவ எழுத்துக்களை
பதமோடு கோர்த்தளித்தால்
கிடைப்பவை வாக்கியமாம்
கிள்ளை மொழி தமிழ் மொழியாம்

சொற்கள் இனிப்பது
சுந்தரத் தமிழில்தான்
பார்ப்பதற்கு பற்பல போல்
எழுத்துக்கள் தோன்றினாலும்

பாடினாலும் கேளினாலும்
பகை மறந்து உவகை கொள்ள
தேன் தமிழ்ச் சொற்களன்றோ
தினமொருவர்க்கு சுவாசக்காற்று


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU


2 comments: