சிதம்பரத்தில்
புறப்பட்டு
சேலம் செல்லும்
பேருந்தில்
வேப்பூரில் நான்
ஏற
விருட்டென்று பஸ்
நகர
பாதிக்கூட்டம்
கீழேதான்
பஸ்ஸுக்குள்
போவத்தான்
நிறுத்தச்சொல்லி
கூச்சலிட
நடத்துனரும்
விசில் ஊத
டம்மென்று
இரைச்சிலிட்டு
கம்மென்று பஸ் நிற்க
பதறிப்போன
டிரைவர்தான்
உதறலுடன் செக்
பண்ண
வண்டி நின்ற
கணப்பொழுதில்
நின்றிருந்த
மாந்தரெல்லாம்
விழா காணும்
கூட்டம் போல்
முண்டியடித்து
உள்ளே வர
டியூட்டியில்
தூங்குகிற
பியூட்டியில்
கண்டக்டர்
விழிக்காமல் வாய்
பிளந்து
போகச்சொல்லி
சத்தமிட
கடுப்பான
ஓட்டுனரும்
கண்டதெல்லாம்
எடுத்துரைக்க
நொண்டியான வண்டி
அங்கே
“ஆர்பனாய்”
ரோட்டில் நிற்க
கிளம்பாத
புதிர்கேட்டு
கூட்டத்தினர்
கிலேசிக்க
கோபம் கொண்ட
பயணிகளும்
சுடுவார்த்தை
அள்ளி வீச
எரிச்சலாய்
கண்டக்டர்
அமைதி காண சத்தம்
போட
வரும் பஸ்ஸை
எதிர் நோக்கி
அனைவரும்தான்
காத்திருக்க
கடமையில்
“ப்ரேக்” கிடைத்த
கண்டக்டர்
ஓட்டுனரை
அருகிலுள்ள
டீக்கடைக்கு
மகிழ்ச்சியுடன்
கூட்டிச்செல்ல
பார்த்துவிட்ட
பயணிகளோ
பட்டிமன்றம்
நடத்துகின்றார்
பயணத்தடை
காரணத்தால்
வந்த லாபம்
யாருக்கென !
KAVIGNAR
MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
No comments:
Post a Comment