ஊட்டியில் இருக்கும் ஒரு
பிரண்டும்
ஒட்டப்பாலத்தில் வசிக்கும்
பழையபிரண்டும்
கரூரில் வாழும் கஞ்சப்
பிரண்டும்
கோவையில் ஒருசேர வந்திறங்க
முன்னறிவுப்பு எதுவும் இல்லாமல்
நண்பர்கள் வருவதை நான்
பார்த்து
ஆச்சரியத்தில் ஒரு
சப்மரைனாய்!
சந்தோஷத்தில் ஒரு
கன்கார்டாய்!
வந்த களைப்பை ஆற்றாமலேயே
கிளம்பு கிளம்பென சத்தமிட
காரணத்தை நான் கேட்காமலேயே
டூர் திட்டத்தைச் சொன்னார்கள்
செய்யப்போகும் செலவை
யோசித்து
கட்டுப்படியாகாதென நான்
பறைய
காசு பற்றி கவலைப் படாதென
கஞ்சன் தலையில்தான்
கட்டுகிறோமென்க
பஸ்ஸ்டேஷன் நாங்கள்
நடக்கையிலே
பழனிக்கு பஸ்ஸும் வரச் சொல்ல
ஓடிப்போய் நாங்கள்
ஏறிக்கொண்டு
உற்சாகமாய் தொடங்கி வைக்க
கந்தன் தர்ஷனை
முடிச்சிக்கிட்டு
கஞ்சனைப் “பழனி” யாய்
ஆக்காமல்
படி இறங்கி நாங்கள்
வருகையிலே
பார்த்தோம் ஒரு “தளதள
கொழுகொழு”
மணமானது புதுசெனத் தோண
மாப்பிள்ளையுடன் சிவப்புச்
“சாரி”யில்
சந்தோஷமாய்ச் சிரித்துப்
பேசி
படியேறிப்
போய்க்கொண்டிருந்தாள்
அடுத்த இடம் கொடைக்கானலென
“அக்கறை”யாய் கஞ்சன் சொல்ல
ஆட்டிவிட்டோம் தலையைப்
பலமாய்
பிரயாண ஓசி குஷியினாலே
சுயீஸைட் பண்ணிக்க
திட்டமிடாமல்
சுயிசைட் பாயிண்டை ரசிக்கையிலேயே
அதோ! அந்த “தளதள கொழுகொழு”
ஆச்சரியத்தில் கண்கள்ஸ்
விரிய்ய்ய்ய
மதுரையில் மீனாட்சி கோயில்
திருப்பரங்குன்றம்,
நாயக்கர் மகாலென
பழமுதிர் சோலை பலவும்
பார்த்து
பயணம் முடித்து பஸ்ஸ்டேண்ட்
போக
பார்த்தோமங்கே “தளதள
கொழுகொழு”
பிரமித்தோம் ஆச்சரியம்ஸ்
“கியூப்” பாய்
இன்னுங்கொஞ்சம் பார்க்க ஆசை
தூண்ட
அவனவன் மண்டையைப் பிளந்தோம்
கண்டுபிடித்தேன் வழியெனக்
கூறி
ஊட்டிக்காரன் தலையைச்
சிலுக்க
ஓடோடிச்சென்று அவள் புருஷன்
கையை
மாற்றி மாற்றிக் குலுக்கச்
செய்தோம்
பேந்த பேந்த அவனும் விழிக்க
“தளதள கொழுகொழு”வும்
ஹெல்புக்குவந்து
பழனியிலிருந்தே
பார்த்துவரோமென
பேந்திக்கொண்டிருந்தவனை
சாந்தமாக்கினாள்
கரூர் கஞ்சனும் மகிழ்ச்சி
வெள்ளத்தில்
குபேரனாய் உச்சிக்குப் போயி
எல்லாச் செலவும் தானே ஏற்க
ஆண்டி ஆகத் தரையிறங்கி
வந்தான்.
KAVIGNAR MILLENIUM
VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
Hmmmmm....super
ReplyDelete