Thursday, 23 August 2012

28. வதந்தி


நான் ஒருநாள் கவலையோடு
அமர்ந்திருந்தேன் மாடியின் மீது
நங்கை ஒருத்தி கீழே ரோட்டில்
நடந்து சென்றாள் தன்னந்தனியாய்

கண்டதும் கன்னியென்று அறிந்து
கவலை நீக்க உற்று நோக்கி
அவள் எங்கள் காலனி வாசி
அவசரமாய் எங்கோ போகிறாள்

பார்வை போகும் தூரம் மட்டும்
பார்வையாலே பின் தொடர்ந்து
நானும் சென்றேன் தெரியாதவாறு
நங்கை கொஞ்சமும் அறியாதவாறு

சட்டென்று தெருச் சந்தியில்
எதிர்பார்த்து ஏனோ நிற்க
ஆட்டோ ஒன்று அங்கு வரவும்
அவள் மட்டும் அதில் ஏறவும்

பட்டென்று என் மனம் அறிந்தது
பாவை எங்கோ போகிறாளென்று
கவலை கொண்டு மீண்டும் அங்கே
காத்திருந்தேன் மௌனம் கூட்டி

மணி நேரம் கழிந்தபின்னே
தெருச்சந்தியில் அதே ஆட்டோ
வருவதை நானும் பார்த்து
நோட்டமிட்டேன் இறங்கும் ஆளை

அலங்கோலமாய் அவளும் இறங்க
அறிந்து கொண்டேன் தனியொருவிதமாய்
நடந்த நடையை தானே நோக்கி
நடந்தவற்றை நானே உண்ர்ந்தேன்

அக்கம்பக்கம் நண்பிகளைக் கூட்டி
அவசரத்தில் செய்தி வாசித்தேன்
கண்டவற்றை மேலும் திரித்து
கண்டது போல் காட்சியை தந்தேன்

காலனி பூரா பரவிய செய்தி
வீடுவீடாய் சென்று தாக்க
நானொரு பெண் என மறந்து
நடு வீட்டில் தனித்தே இருக்க

வேலைக்காரி விவரம் சொன்னாள்
நேற்று நடந்த சம்பவம் பற்றி
பாவம் ஒருத்தி பரப்பிய வதந்தி
பலியாக்கிவிட்டது நல்ல ஒரு பெண்ணை.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: