Thursday, 9 August 2012

24. இஞ்சி தின்ற குரங்காய்


மூன்று நாளாச்சு சைட்டுக்குபோயி
முணுமுணுத்தனர் நண்பர்கள் மூவரும்
நானும் கொஞ்சம் வருத்தத்தைக் கூட்டி
நண்பர்கள் சொன்னதை ஆமோதித்தேன்

பலநாள் தொடர்ந்த இந்தப் பழக்கம்
பாதியில் எங்களை விடுவதாய் இல்லை
அடாமல் மழை விடாமல் பெய்தாலும்
அட்டெண்டன்ஸ் கொடுப்பது தவறியதில்லை

பயிற்சி வகுப்பின்மீது பழியைப்போட்டு
பலகோணங்களிலும் சிந்தனை செய்து
இன்றுமாலை நாம் போகிறோமென
எடுத்தமுடிவினில் மாற்றத்தைத்தவிர்க்க

வழக்கத்துக்குமாறாய் ஒன்ஹவர் முன்பே
ஆஜரானோம் ரங்கநாதன் தெருவில்
கூட்டமோ சொற்பமாய் இருக்க
தெருவரை பார்வையைப் பாய்ச்ச

இன்னும் நேரம் இருக்கிறதென்று
எங்கள் தலைவன் ஆறுதல் சொல்ல
மாலை ஆறைத் தாண்டுவதற்கு முன்பே
மக்கள் கூட்டமும் பெருகிப் போக

எங்கள் சைட்டுக்களைத் தொடர்ந்துதாக்கி
கண்பார்வையால் அளந்து கொண்டிருந்தோம்
கலர்கலராய் கன்னியர் வருவதை
மலர் மலராய் பிரித்து ரசித்தோம்

திடீரென்று நான்கு நங்கையர்
ஒட்டுமொத்தமாய் லோஹிப்பில் செல்ல
பின்தேகம் தந்த பயங்கர ஷாக்கால்
பின்தொடர்ந்து நாங்களும் செல்ல

நங்கையர் நால்வரும் பேச்சினில் மூழ்கி
நாங்கள் நால்வர் தொடர்வதை மறக்க
தேகம் கொடுத்த கவர்ச்சிப்பகுதியை
வகைவகையாய் ஒப்பிட்டு ரசிக்க

முகங்களை முற்றிலும் பார்க்காமலேயே
கற்பனைக் குதிரையில் வேகத்தில் பறக்க
காரோட்டி தொடர்ந்த காரின் ஹாரனால்
போய்க் கொண்டிருந்தோர் யாவரும் திரும்ப

நாங்கள் அவர்கள் முகத்தைப் பார்க்க
நியாண்டர்தால் முகங்களாய்த் தோன்ற
அன்று கிடைத்த அதிரடி அதிர்ச்சியில்
என்றும் மாறினோம் இஞ்சிதின்ற குரங்காய்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: