மேமாத டிரான்ஸ்பர் சூட்டினால்
அக்ரீயான அக்ரியை நாடு கடத்த
வங்கித்தலைமை முடிவெடுத்து
தமிழ்நாட்டிலிருந்து வயநாட்டுக்குத் தள்ள
மாற்றல் கொடுத்துப் போகச்சொல்லியும்
மனதில் எழுந்த சின்ன சந்தேகம்
மலையாள தேசத்து மலையாளத்தை
எப்படி நாம் வெல்லப் போகிறோம்?
இரயிலைப்பிடித்து பஸ்ஸில் செய்து
ஆட்டோவில் சென்று அவ்விடமிறங்க
“ஹா வந்தாச்சா” அதிரடி வேட்டுடன்
வங்கிக்கிளையோ வரவேற்பளிக்க
மொழியின் பயம் வெடியில் கரைய
நொடியில் அறிந்தேன் கிளை தமிழென்று
தமிழ் எனக்கு மலையாளம் தந்து
மொழிப்பிரச்சினை
தீர்க்குமென கனவ
அவர் எனக்குப் பணித்தது எல்லாம்
ஃபீல்டு விசிட்
தினம் போகணுமென்றும்
போகும்போது ஒவ்வொருமுறையும்
அழைத்துச்செல்ல
தவறக்கூடாதென்றும்
கற்ற மலையாளம்
கற்பிக்காமல்
கரடு கரடாய்
சுற்றச் சொல்லவும்
செல்லுமிடமெல்லாம்
பெண்டிரைத் தேடி
பார்க்கும்
பார்வையால் பயத்தைக்கிளறவும்
ஓடும் குதிரை
நான் என உணர்ந்தேன்
ஓட்டும் ஜாக்கி
அவரென அறிந்தேன்
செய்வதறியாமல் கையைப்பிசைந்தேன்
உபாயம் ஒன்றால் புன்னகை புரிந்தேன்
அடுத்த விசிட்டுக்குப் போகும் முன்னே
அவரை நான் விரும்பி அழைக்க
சந்தோஷத்தில்அவர், பின்சீட்டில் அமர
சரிவர என் பிளானை நினைத்தேன்
படபடவென ரோட்டின் ஓரமாய்
பள்ளங்கள் நோக்கிப் பார்த்துச் சென்று
இஞ்சிடென்டை
ஆக்ஸிடெண்டாய்
பைக்கின்
உதவியால் கன்வெர்ட் செய்தேன்
மறுநாள் வங்கியில் கிளை லீவென்க
மாலையில் நானும் ஆஸ்பிட்டல் செல்ல
கையெடுத்து கும்பிட்டார் என்னைப் பார்த்து
காடுமேடு காண விருப்பமில்லை
சொல்லி.
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
good good...
ReplyDelete