Thursday, 25 October 2012

40. ஆம்வே ஹமாரா வே


அங்குமிங்கும் அலைந்து திரிந்து
ஆம்வே பற்றி ஆவலுடன் உரைத்தால்
ஆமெனச்சொல்லி முன்வர யாரும்
அதிகப்படியாய் தயாராய் இல்லை
ஏனடா ஏஜன்ஸி எடுத்தோம்
எதற்கடா வம்பில் குதித்தோம்
சம்பளமே போதுமென்றிருந்தால்
சராசரியாய் வாழ்க்கை போகும்

எண்ணியது எந்தன் மனது
அலறியது எதிர்காலம் அறிந்து
பணிவுடன் பின்னடைவு பற்றி
பரமாத்மா அப்லைனிடம் கேட்க
சோர்வுகண்டு துவளவேண்டாம்
சொல்லியபடி சுற்றை மேற்கொள் என
தினம் தோறும் வீட்டிற்கு வந்து
தெம்பினை நியூட்ரலைட்டாய் தந்து

உற்சாகமாய் இறக்கியும் விட்டார்
உறக்கத்தினை நீக்கியும் விட்டார்
கடுமையாய் போராடச்சொல்லி
கதைகதையாய் எடுத்துச்சொன்னார்
கேட்டுக்கொண்டு மனதைத் தேற்றி
கேள்விகளை எனக்குள் கேட்டேன்
பதில் வர தாமதமறிந்ததும்
பக்குவமாய் கிடப்பில் போட்டேன்

பழைய பிரண்ட் மனநிலை பற்றி
பரமாத்மா தெரிந்துகொண்டு
அவருடைய அப்லைன்களையெல்லாம்
அணி அணியாய் அழைத்துவந்தார்
ஒவ்வொருவரும் லெக்சர் கொடுத்து
ஒருவழியாய் குழப்பத்தை நீக்கி
செய்யச்சொல்லி தூண்டில் போட்டு
“செய்கிறேன்” பிடித்துச் சென்றார்

இன்னும் இவர்கள் விடுவதாய் இல்லை
இனிமேல் நாம் செய்யத்தான் வேண்டும்
உட்கார்ந்திருந்தால் பயனொன்றும் இல்லை
ஊர்சுற்ற கிளம்பத்தான் வேண்டும்
படிப்படியாய் தெளிவினைப் பெற்று
அடிப்படையான லிஸ்டைப் போட்டேன்
ஐநூறைத் தாண்டவேண்டுமென
பேசிக்கொண்டதை நினைவில் கொண்டேன்

எழுதிமுடித்து டோட்டலைப் பார்த்தேன்
எழுநூற்றைம்பது என்று வந்தது
இலேசாக புன்முறுவல் பூத்தேன்
களத்தில் இறங்க எத்தணித்தது
ஒழுங்காகப் பிளானைப் போட்டேன்
ஒவ்வொருவராய் பார்க்கத் துணிந்தேன்
ஓடுகளத்தில் இறங்கி ஓட
ஒவ்வொருநாளும் ரிகர்ஸல் செய்தேன்

முதலாவதாய் முக்கியப் பிரண்டென
மூர்த்தி என்ற நபரைப் பார்த்தேன்
ஆசை தீர பேசி முடித்து
“அப்புறம் பார்க்கிறேன்” சொல்லி முடித்தான்
இரண்டாவதாய் இன்னுமொரு நபர்
எடுப்பார் என மோகம் கொண்டு
இரவுபகலாய் தொலைபேசியில் தொடர்ந்து
இல்லை என்ற பதிலைப் பெற்றேன்

மூன்றாவது நண்பரிடம் சென்று
முழுமூச்சாய் எடுத்துச்சொல்லி
முடியாது எனப் பதிலைக்கேட்டு
மேல்மூச்சு வாங்கக் கண்டேன்
பெண்மணி ஒருவர் எடுப்பாரென
என் மனைவியும் பிராமிஸ் செய்ததை
நம்பி நானும் அவரைப் பார்க்க
நபர் புத்திசாலி எனப் பெயரும் எடுக்க

வெறுத்துப்போய் வீட்டுக்கு வந்தால்
வீட்டுவாசலில் பரமாத்மா கண்டேன்
நிலைமை என்னவென்று கூறச்சொல்லி
நெடுநேரம் தொந்தரவு செய்தார்
முகத்திலே கடுப்பைத் தேக்கி
முதன்முறையாய் முறைத்துப் பார்த்தேன்
மனிதனவர் பார்வை புரிந்து
“மறுபடி வருகிறேன்” என ஓடி மறைந்தார்

இது நமக்கு ஒத்துவருமா வென
இன்னமும் நான் டிபேட் செய்கிறேன்
எண்ணிஎண்ணி சிந்தனை கெட்டு
உறக்கம்வரவும் முடங்கிக்கொள்கிறேன்
கண்டதொரு கனவுகள் எல்லாம்
கண்கள் உருட்டிச் செய்யச் சொல்லி
வந்த தூக்கத்தை தவணையாய் மாற்றி
வராத நபர்களை காணச்சொல்ல

ஐந்தாவதாய் ஒருவரிடம் சென்று
“ஆம்வே” பற்றி செய்யச் சொன்னேன்
அவர், புதியதாய் இருக்கெனச்சொல்லி
பத்துநிமிட அவகாசம் பகிர்ந்தார்
செய்வார் என எதிர்பார்த்து நானும்
சிந்தனையை முடுக்கிவிட்டேன்
கொஞ்சநாள் பொறு எனச் சொல்லி
நெஞ்சினிலே வேதனை தந்தார்

அடுத்த நாள் குளித்து முடித்து
ஆம்வேக்கு டாட்டா சொல்ல துணிய
உள்மனதில் எழுந்த ஓலம்
ஒருவரியில் கீதாசாரமாய்த் தொனிக்க
ஆயிரம் பேர் நோ சொன்னாலும்
“ஆம்” சொல்லும் நபருக்கு காக்கச்சொல்ல
ஆம்வே “ஹமாரா”வே சொல்லி
தோல்வி என்னும் சொல்லை மறந்தேன்

KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment:

  1. நண்பர்களே எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னும் 5 வருடத்தில் இந்தியாவில் NO 1 இடத்திற்கு வரும் . அது ஆம்வே பண்ணும் மக்களால் அல்ல , உங்களைபோல இலவசமாக மார்கெட் பண்ணும் மக்களால் தான்.நீங்கள் நல்லது பண்றோம் என்று, கூட ப்ரொமோட் தான் பண்றோம். சில படங்கள் ரிலீஸ் ஆகும் முன் கோர்ட்ல கேஸ் போடுவாங்க , அது எதுக்குனா அதுவும் ஒரு விளம்பர ட்ரென்ட் .பேப்பர் காரர் காசே இல்லாம டெய்லி படத்தோட நேம் ப்ரமோட் பண்ணுவார்.
    ஆமா நான் தெரியாமதான் கேக்குறேன் நீங்கள் KFC சிக்கென் சாப்டதே இல்லையா ? இல்ல macdonald போனது இல்லையா? புள்ள குட்டி மட்டும் MNC ல வேல பாத்தா ,MNC ல வேல பாக்குறானு சீன் போடுறது இல்ல. இது எல்லாம் உங்க அப்பனோட கம்பெனியா? இதுக்கெல்லாம் அமெரிக்க காரன் வேணும். எந்த ஊரு நாயம் ?
    உன் பொருளு 100% தரமா இருந்தா எந்த நாயாவது ஆம்வே பக்கம் போகுமா? உங்களுக்கு கடுப்ப இருந்த யாரு என்ன பண்ண முடியும் ? ஆம்வே ப்ரோட்டின் பவுடர் 10% கு 8% ப்ரோட்டின் இறுக்கம், ஆனால் இந்தியன் ப்ரோட்டின் பௌடர்ல 10% கு 2% தான் ப்ரோட்டின் இருக்காம் ? நான் சொல்லப்பா நம்ம நாடோட நிபுணர் குழுதான் சொல்லுது . IDSA இந்தியன் டைரக்ட் செல்லிங் association ஆம்வேய மெம்பரா சேத்த குழுவ கேள்வி கேக்காம என் இப்படி நெட்ல ? என்னத்த சொல்றது.
    உங்கள பாத்தாதான் எனக்கு பாவமா இருக்கு
    போங்கப்பா போயி புள்ள குட்டிய படிக்க வைங்க .

    ReplyDelete