Saturday, 23 June 2012

2. புராணமாக்கு


 

காட்டின் நாயகனாம் 
கள்ளம் செய்யும் வீரப்பனாம்
கொலைகள் பலசெய்த
கொடூரன் அவன்தானாம்

காவலர்கள் பலர் சென்றும்
பாவி அவன் கிட்டவில்லை
காவலர்போல் மீசைவைத்த
கோபாலிடம் கிட்டுவதேன் !

ரகசியம் புரியவில்லை
நடப்பவையும் தெரியவில்லை
கலிகாலம் ஒன்றென்றால்
“புலி காலம்” இதுவன்றோ !

அரசியல் தெரிந்தவர்கள்
ஆதாயம் தேடத் தேட
அகப்பட்ட ராஜ்குமாரோ
அறிக்கையும் விடுகின்றார்

விடுவார்கள் விடுவார்கள்
விரைவில் விடுவார்கள்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏக்கத்துடன் இருக்கின்றார்

சிஎம்மும் சிஎம்மும்
சீரோடு வருவார்கள்
கேட்டதைத் தருவார்கள்
ஏங்குகிறான் வீரப்பன்

புரிந்தவர்கள் பிசைகிறார்கள்
புரியாதோர் பிளக்கிறார்கள்
காட்டிலுள்ள வேடிக்கையை
நாட்டிலேயே பார்க்கிறார்கள்

கொலைகள் பலசெய்திருந்தும்
கோருவது பொதுமன்னிப்பு
சிபாரிசும் செய்கின்றார்
சோபால கிருஷ்ண நண்பர்

கோபால் கொண்டுவந்த
கேசட்டைப் பார்த்த பின்பு
என்ன இது என்ன இது
கேட்கின்றார் வாக்காளர்

போய்யா புண்ணாக்கு
பொது ஜனம் உனக்கெதுக்கு
காலத்தின் கூவத்தை
ஞாலத்தின் புராணமாக்கு !


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU







1 comment:

  1. What a fun with Veerappan and Rajkumar.

    ReplyDelete