சேலத்தில் நான்
ஏறி
சிதம்பரம் நான்
போக
பேருந்து
நிலையத்தில்
பஸ்ஸுக்கு
காத்திருந்தேன்
வந்தது பேருந்து
வண்டு போலத்
தானூர்ந்து
கூட்டங்கள்
காத்திருந்து
கூவியது வாய்
திறந்து
மொய்த்தது ஈ போல
மோதியது சீட்
பிடிக்க
கத்தியது கலவரத்தில்
கலங்கியது
நிலவரத்தில்
படித்தோர்
பாமரோர்
பஸ்ஸில் சமமானார்
குடித்தோர்
குளித்தோர்
கும்பலில்
சிக்குண்டார்
திட்டினார்
கண்டக்டர்
டிக்கட் வாங்கி
ஏறச்சொல்லி
கத்தினார்
கண்டபடி
கடுகடுப்பை
வெளிப்படுத்தி
பேன்ட் போட்ட
சீமான்கள்
பிடித்த சீட்டை
நிலைப்படுத்த
கர்சீப்பைப்
போட்டுவிட்டு
கவனமுடன்
கீழிறங்க
“தோதி”யிட்ட
மறவர்களோ
துணிஎதுவும்
கிடைக்காததால்
போரிட்ட
மன்னர்போல்
பிடித்த சீட்டில்
நிலைத்திருக்க
கோபம் கொண்ட
கண்டக்டர்
கெட்ட வார்த்தை
வெளிக்களிக்க
கேட்டுவிட்ட
வேட்டியாளர்ஸ்
துரிதமுடன் பின் தொடர
பாதிவழிப்
பயணிகளை
பக்குவமாய்
ஒதுக்கிவிட்டு
சிதம்பரம்
போய்ச்சேர
சீட்டு தந்தார்
ஒருவழியாய்
கனத்தமாத
கர்ப்பிணி போல்
கண்டபின்னர்
கண்டக்டர்
விசிலடித்தார்
போகச்சொல்லி
விடை பெற்றது
பேருந்து.
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
very good...
ReplyDelete