Saturday, 30 June 2012

8. வரம்பு மீறிப்போச்சு


சேலத்து மாம்பழமாய்
சிவந்தது கன்னமிரண்டும்
அறந்தாங்கி மாமகனால்
அடி வாங்கி துன்புற்றேன்

நடந்தவையோ சிறு தவறு
நள்ளிரவின் தூக்கத்தால்
நடப்பவையோ பெரும்புதிரு
பெண்மணியின் ஊக்கத்தால்

கேளுங்கள் துரைமாரே
கதை நடந்த காரணத்தை
கேட்டுவிட்டு உணர்த்துங்கள்
குற்றம்தான் என்னவென்று

பெருங்கூட்டப் பேருந்தில்
பயணித்ததோ ராத்திரியில்
முன் பின் நான் நகர
முடியாமல் பரிதவிக்க

பக்கவாட்டில் தடியரெல்லாம்
மூட்டைபோல் சாய்ஞ்சி விழ
இஞ்சளவும் இடமில்லாமல்
எள்ளளவும் உறக்கமில்லாமல்

கம்பியைப் பிடித்துக்கொண்டு
கால் கடுக்க நான் நிற்க
டீனேஜ் பருவத்தில்
தனி ஆளாய் முதற்பயணம்

இரவு விளக்கு வெளிச்சத்தில்
எரிச்சலாய் டைம் போக
பின்னிருந்த ரெண்டு சீட்டில்
முப்பதிற்குள் பெண்ணொருத்தி

அலங்கோலத்தில் மார் விலகி
அமர்ந்து வந்தாள் முன் கவிழ்ந்து
காட்சி தந்த பொக்கிஷமோ
கண்டுகொள்ள என்னை விளிக்க

டிரைவர் போட்ட ஸ்விட்ச்களால்
திடுமென பல்ப்ஸ் எரிய
பிரகாச வெளிச்சத்தால்
அவள் கணவன் கண்விழிக்க

அவசரத்தில் அப்பெண்ணும்
என்னைக்காட்டி குறை கூற
வயதினால் ஜட்ஜ்மென்டும்
வரம்பு மீறிப்போச்சுதய்யா !


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: