Sunday, 29 July 2012

21. மௌனம் சாதித்தேன்


பசுஞ்சோலை எங்களது கிராமம்
பத்து ஏக்கர் எங்கள் தோட்டம்
பச்சைப்பசேலென மரம்செடிகொடிகள்
தோட்டத்தைச்சுற்றி வேலியாய் இருக்க

பத்துப்பன்னிரண்டில் சிறுவனாய் நானும்
பசுமையைப்பார்த்து தினமும் களிக்க
எல்லோருக்கும் இஷ்ட பிள்ளையாய்
எது கேட்டாலும் கிடைக்கும் கிள்ளையாய்

வளர்ந்துவரும் பருவத்தில் நானும்
தோட்டம் காணச்சென்றேன் ஒரு நாள்
மாங்காய், மரத்தில் இருப்பதைக் கண்டு
மாமாவிடம் பறித்துக்கொடுக்கச் சொல்ல

“அவசர”த்திலிருந்த மாமா என்னை
மரத்தின்மீது ஏற்றியே விட்டார்
வேலியில் இருந்த மரத்தில் நானும்
அதிகதிகமாய் காய்கள் எடுக்க

போதுமென்ற அளவுக்குப் போயி
கீழே இறங்க மாமாவைத் தேட
மாமா அங்கே இல்லாததைக்கண்டு
மனத்தில் பயம் தேறக்கண்டேன்

இருந்தாலும் செய்வது அறியாமல்
மரத்திலேயே தொடர்ந்து இருந்து
வேலிக்கடுத்துள்ள பக்கத்து நிலத்தை
வெறுதே நான் பார்த்துக்கிட்டிருந்தேன்

அப்பொழுதொரு ஆணும் பெண்ணும்
மர நிழல் நோக்கி நடந்து வரவும்
அவசர அவசரம் முகங்கள் காட்ட
அறிந்து கொண்டேன் அவர் வேறு வேறென

சத்தம் போடாமல் நான் அங்கு இருக்க
வந்தவர்கள் சுற்றுமுற்றும் நோக்க
யாருமில்லை என “அறிந்து” கொண்டு
புடவை ஜாக்கெட் வேட்டியைக் கழட்ட

அவசரத்தில் இடம் ஒன்றைத் தேட
அமர்ந்திருந்தேன் அமைதியாய் மரத்தில்
பரக்க பரக்க பார்வையை மாற்றி
படுத்துக்கொண்டே சில்மிஷம் செய்ய

வரம்புக்குமேலே போகுது என்று
“வாவ்” என நானும் கத்த
துண்டைக்காணோம் துணியைக்காணோமென
அவர்கள் எழுந்து வேகத்தில் ஓட

சத்தம் கேட்டு மாமா ஓடிவர
இவர்கள் ஓடுவதை அவரும் பார்க்க
காரணமென்னவென்று என்னைக் கேட்க
கம்மென்று மௌனம் சாதித்தேன்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

Wednesday, 25 July 2012

20. பழைய பிராஞ்சஸ்


அக்ரி என்னை டச் பண்ணாமல்
கிளையை மட்டும் டிரான்ஸ்பர் செய்ய
“ஆக்டிங்” தந்த வேலைப்பளுவால்
வரும் ஆளைத் தினமும் நினைக்க

அன்று வந்த கடிதங்களோடு
டி.ஏ பில் காப்பியும் வரவும்
ஆவலோடு எடுத்துப் படித்தேன்
வருபவர் முன்னுரை அறிந்தேன்

கொஞ்ச நாள் இடைவெளிக்குள்ளே
வந்துவிடுவாரென நினைப்பு தோண
ஆக்டிங்கை சீக்கிரம் உடைக்க
வந்தேவிட்டார் ரெண்டே நாளில்

அறிமுகத்தை நன்றாய் நடத்தி
பழைய பிராஞ்சின் பெயர்களைக் கேட்க
வேலூர் சேலம் ஈரோடு என்க
ஆம்பூர் வாணியம்பாடி அணைக்கட்டென்க

என்னைப்பற்றிய விவரங்கள் கேட்க
நானும் சொன்னேன் திருப்தியடைந்து
“ஒரு நாள் கண்டிப்பாய் குவார்ட்டர்ஸ்”வரணும்
உற்சாகமாய் விரும்பி அழைக்க

பலநாள் கழித்தே பார்ய குழந்தைகளோடு
மேலாளரின் வீட்டுக்குப் போக
நானும் அவரும் பேங்க் பற்றிப்பேச
அவர் மனைவி என் மனைவி ஓ சாரி சார்ர்ர்ரீ!

என்மனைவியும் அவர் மனைவியும்
ஊண் உடல் மறந்து உள்ளே பேச
அதிகம் பேசி விடைபெற்ற பின்னர்
சீக்கிரமே வீடு வந்து சேர

மனையாள் சொன்னாள் படுக்கையின்போது
மானேஜர் குடும்பம் கஷ்டக்குடும்பம்
ஆறு தங்கைகளைக் கட்டிக்கொடுத்தும்
இன்னுமொன்று இருக்குதாமென்றும்

எங்கெங்கென அறியாமல் வினாவ
வேலூர் சேலம் ஈரோடு ஆம்பூர்
வாணியம்பாடி அணைக்கட்டென்றும்
“அடுத்ததெங்கோ” என ஆச்சரியப்படவும்

சட்டென்று நானும் உரைத்தேன்
அடுத்தது.........இங்குதான் இருக்கும்!
புரியாமல் அவளும் விழித்தாள்
புரியவைத்தவுடன் அவளும் சிரித்தாள்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU


Wednesday, 18 July 2012

19. எங்கள் மலையாளி


டிரெயினீஸ் ஆகிய நாங்களெல்லாம்
கோவா ஒரு நாள் டூர் செல்ல
திட்டம் போட்டோம் சில நாளாய்
டிராவல் இனிதாய் இருப்பதற்கு

இரயிலில் பயணம் லோண்டா வரை
பஸ்ஸில் பயணம் பனாஜி வரை
சீப்பாய் செலவும் இருப்பதினால்
சொன்னார் சம்மதம் அனைவருமே

டிப் டாப்பாய் டிரஸ் செய்து
இளமை மிடுக்காய் புறப்பட்டு
ஒருவரை ஒருவர் அழகு மிஞ்ச
அடைந்தோம் அன்று “அஞ்சும்”பீச்

எல்லோரையும் நான் நோக்கிவிட்டு
என்னுள் கிடந்த ஒரு டவுட்டை
அருகில் நடந்த நண்பனிடம்
அப்பாவியாய் நான் அவிழ்த்துவிட

இன்னுமா தெரியலை உனக்கென்று
எகத்தாளமாய் அவன் சிரிக்க
சின்னக்குழந்தையாய் நான் நின்று
சொல் சொல்லெனப் பின் தொடர

சொல்லக்கூடா ரகசியமாய்
அவனும் அப்பொழுது பொத்திவைக்க
ஒவ்வொருவர் கண்ணிலும் பளபளப்பு
எதையோ தேடும் எதிர்பார்ப்பு

தேடித்தேடி சோர்ந்தபின்னர்
நண்பர்களெல்லாம் கூச்சலிட
சஸெஷன் கொடுத்த “சம்பத்”தும்
செய்வதறியா மலைத்து நிக்க

நானும் அங்கு போய் முன் நின்று
காரணம் புரியாமல் களைப்புற்று
சத்தம் போட்டேன் அவனிடத்தில்
சுற்றும் ரகசியம் சொல்லென்று

சொல்ல அவன்வாய் திறக்குமுன்
எல்லோர் செவியையும் ஒலி தாக்க
“அண்ணோ அவ்விட” எனச்சொன்னான்
மகிழ்ச்சியில் எங்கள் மலையாளி

ஜெர்மன் நங்கை அங்கொருத்தி
இருபத்தெட்டில் பிறந்த மேனியாய்
கொஞ்சல் கொஞ்சலாய் நீச்சலடித்து
கொஞ்சம் கொஞ்சமாய் காட்சி தந்தாள்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU


18. புன்னகை


குடியாத்தம் நகரப் பகுதியில்
வாடகை வீட்டுக்கு பஞ்சமில்லை
இருந்தாலும் நான் உணர்ந்தது
“புத்திபஞ்சம் ஓனருக்கதிகம்”

தண்ணீருக்கு சண்டை போட்டு
கரண்டு பில்லுக்கு முகத்தைக் கோணி
கெஸ்ட் வந்தால் வெறுப்பாய் பார்க்க
கேட் திறந்தால் முறைப்பாய் முறைக்க

பரம எதிரியாய் எங்களை நினைக்க
புழுங்கிப்போனோம் மனதில் தினமும்
பிரச்சினை என்று சொல்லப் போனால்
“காலி பண்ணிக்கோ” காட்டுக்கத்தல்

வாடகையை ஒழுங்காய் கொடுத்தும்
புன்னகையை பலவாய் செய்தும்
திருப்தி இல்லா ஓனர்களினால்
“திரிசங்கு”ஸ் வீடாய்த்தெரிய

ஓனர் மற்றி ஓனர் சென்றும்
உடன் வந்ததும் அதே பிரச்சினைஸ்
புரிந்துகொண்டேன் புதிருக்கு மோட்டிவ்
புது டெனன்டுக்கு வாடகை கூட்டும்

ஒரே பிராஞ்சில் செவன் யியர்ஸ் சர்வீஸ்
ஒரே ஊரில் ஆறு முறை ரெசிடென்ஸ்
மாற்றி மாற்றி அலுப்பாய் அலுக்க
மனதினில் வெறுப்பாய் வெறுக்க

ஒரு வீட்டில் ஓவர்டேங்க் காம்மன்
ஸ்விட்சும் கிணறும் ஓனர் ஊட்டுக்குள்
தண்ணீர் தனக்கு கிண்ற்றில் சேந்தி
டேங்கைத்தான் காலியாவே விட்டார்

சண்டையிட்டு காலி பண்ணச்சொல்ல
சாவி பூட்டு எங்களது போட்டு
மௌனமாய் வேறு வீடு செல்ல
நாளிரண்டு தானாய் நகர

ஓடோடி வந்தார் எங்களைத்தேடி
பூட்டைத்திறந்து வீட்டைவிடச் சொல்லி
கும்பிடு போட்டார் எங்களைக் கெஞ்சி
காரணம் கேட்டேன் மனைவியைநோக்கி

திறந்துவிட்டுள்ள டேப்ஸ் எல்லாம்
டேங்க் தண்ணீரை நொடியில் வடிக்க
பாவம் அவர் என்ன செய்வார்
பரிதாபித்தாள் புன்னகை பூக்க.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU