Saturday, 7 July 2012

12. லேடி “ஸ்டாஃப்”பு


வங்கிப்பணி சுலபமென்று
வெளியில் ஆட்கள் சொல்லக்கேட்க
பெண்டு கழன்று வேலை செய்து
ஓய்வுக்காக ஏங்கி நின்றேன்

லஞ்ச் உண்ணும் நேரத்தில்தான்
பத்து நிமிட இடைவெளியில்
லேசாக கண்ணயர்ந்தேன்
விரிந்ததய்யா பழைய காட்சிகள்

கொஞ்சநாளாய் ஸ்டேட்பேங்கில்
கிளார்க்காய் உத்தியோகம்
கொடுத்ததப்போ வங்கிப்பயிற்சி
கர்நாடகா பெல் காமில்

பத்தொன்பது எழுபத்தெட்டு
வருடமென நினைவுதட்ட
இருபத்தொரு தினங்களுக்கு
இருந்ததய்யா டிரெயினிங்கு

பல மாநில ரத்தினங்கள்
“பாங்காய்” ஓரிடத்தில்
இதயங்கள் ஒன்றுக்கொன்றாய்
கூறும் மொழி வேறுவேறாய்

கட்டுண்டோம் காந்தம் போல
ஸ்டேட்பேங்கு ஸ்டாஃப் என்று
மங்கையரும் சேர்ந்திருந்ததால்
மகிழ்ச்சிக்கே அளவும் இல்லை

எல்லோர்க்கும் இள வயசு
பேங்கில் சேர்ந்த புத்தம் புதிசு
கடமையோடு களிப்பினையும்
வெளிப்படுத்தி நேரம் போக

ஒவ்வொரு நாள் மாலையிலும்
விடாமல் அனைவரும் சேர்ந்து
கடைத்தெருவில் நாங்கள் சுற்ற
கண்ணுற்றோர் உள்ளம் மகிழ

ஜோக்குகள் பலவும் சொல்லி
சொன்னவர்பால் பலரும் ஈர்க்க
வாய்விட்டு சிரித்ததெல்லாம்
சந்தோஷத்தில் நினைவில் வரவும்

என்ன சார் தூக்கத்தில்தான்
இப்படிச் சிரிக்கிறீர்களென
கேட்டுவிட்டு பல்லும் இளித்தாள்
நான் வெறுக்கும் லேடி “ஸ்டாஃப்”பு


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: