Monday, 2 July 2012

10. கொட்டும் மழை


குடியாத்தம் நகரினிலே
“கொட்டும் மழை” காரணமாய்
வங்கி அக்ரி அதிகாரி
வசமாய் நான் மாட்டிக்கிட்டேன்

பத்து நாளாய் ஃபீல்டு விசிட்டை
பக்குவமாய் கட் செய்து
லாக்புக்கும் எழுதாமல்
ப்ளாங்காய்த்தான் விட்டுவிட

பொதுமேலாளர் வருகையினால்
பிராஞ்சே கலகலக்க
வரும்விவரம் அறியாமல்
வணக்கம்வைக்க நான் மறக்க

கிளை அதை நோட் செய்து
கிழவரிடம் கிசுகிசுக்க
“பொது” என்னை கூப்பிட்டு
தன்முன்னால் நிக்கவைக்க

நேராவே என்னிடத்தில்
கேள்வி மேல் கேள்வி கேட்க 
கேட்ட கேள்வி கஷ்டத்தால்
என் முகமும் கருப்பாக

டோஸ்மேல் டோஸ்விட்டு
சொங்கியாய் நெளியவைக்க
கூனிக்க்க்க் குறுக நான்
கொஞ்சமாய்த் திமிர்ப்பட

ரெக்கவரிபற்றி கேட்டால்
டெப்பாசிட்டை எடுத்துச்சொல்ல
NPA  குறைக்கச் சொன்னால்
GPA பிரஸ்தாபிக்க

குழப்பிய குழப்பலினால்
குறைப்பட்டு அவரும் சொன்னார்
லாக் புக்கை எடுத்துவந்து
ஃபீல்டு விசிட்டை காண்பி என்று

உதறிலினால் நானும் அங்கே
“கொட்டும் மழை” பொய் சொல்ல
கிழம் அதை கிளையிடம்
கன்ஃபார்ம் பண்ண ஆர்டர் செய்ய

“பத்து நாளாய் உச்சி வெயில்”
பட்டென்று கிளை சொல்ல
பார்த்த ஒரு பார்வையிலே
மாற்றலுக்கு ரெடியானேன்.

KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

No comments:

Post a Comment