குடியாத்தம்
நகரப் பகுதியில்
வாடகை வீட்டுக்கு
பஞ்சமில்லை
இருந்தாலும் நான்
உணர்ந்தது
“புத்திபஞ்சம்
ஓனருக்கதிகம்”
தண்ணீருக்கு
சண்டை போட்டு
கரண்டு
பில்லுக்கு முகத்தைக் கோணி
கெஸ்ட் வந்தால்
வெறுப்பாய் பார்க்க
கேட் திறந்தால்
முறைப்பாய் முறைக்க
பரம எதிரியாய்
எங்களை நினைக்க
புழுங்கிப்போனோம்
மனதில் தினமும்
பிரச்சினை என்று
சொல்லப் போனால்
“காலி பண்ணிக்கோ”
காட்டுக்கத்தல்
வாடகையை
ஒழுங்காய் கொடுத்தும்
புன்னகையை பலவாய்
செய்தும்
திருப்தி இல்லா
ஓனர்களினால்
“திரிசங்கு”ஸ்
வீடாய்த்தெரிய
ஓனர் மற்றி ஓனர்
சென்றும்
உடன் வந்ததும்
அதே பிரச்சினைஸ்
புரிந்துகொண்டேன்
புதிருக்கு மோட்டிவ்
புது டெனன்டுக்கு
வாடகை கூட்டும்
ஒரே பிராஞ்சில்
செவன் யியர்ஸ் சர்வீஸ்
ஒரே ஊரில் ஆறு
முறை ரெசிடென்ஸ்
மாற்றி மாற்றி
அலுப்பாய் அலுக்க
மனதினில்
வெறுப்பாய் வெறுக்க
ஒரு வீட்டில்
ஓவர்டேங்க் காம்மன்
ஸ்விட்சும்
கிணறும் ஓனர் ஊட்டுக்குள்
தண்ணீர் தனக்கு
கிண்ற்றில் சேந்தி
டேங்கைத்தான்
காலியாவே விட்டார்
சண்டையிட்டு காலி
பண்ணச்சொல்ல
சாவி பூட்டு
எங்களது போட்டு
மௌனமாய் வேறு
வீடு செல்ல
நாளிரண்டு தானாய்
நகர
ஓடோடி வந்தார்
எங்களைத்தேடி
பூட்டைத்திறந்து
வீட்டைவிடச் சொல்லி
கும்பிடு
போட்டார் எங்களைக் கெஞ்சி
காரணம் கேட்டேன்
மனைவியைநோக்கி
திறந்துவிட்டுள்ள
டேப்ஸ் எல்லாம்
டேங்க் தண்ணீரை
நொடியில் வடிக்க
பாவம் அவர் என்ன
செய்வார்
பரிதாபித்தாள்
புன்னகை பூக்க.
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
oh.....
ReplyDelete