Wednesday, 18 July 2012

17. ரிசீவரை கூக்கில்


போனை நான் பார்த்ததுமில்லை
போன் இதுவரை பண்ணியதுமில்லை
கிராமத்தில் பிறந்ததினாலே
போன்பெல் கேட்டால் பயமோ பயம்

சிலசமயம் பேசவே மாட்டேன்
பலசமயம் எடுக்கவே மாட்டேன்
நபரே நீ விழிக்கவும் வேண்டாம்
நடந்ததிது “பச்சீஸ் சால்” முன்

அக்ரிகாலேஜில் சேர்ந்த புதுசு
அவ்வளவாய் பழக்கமே இல்லை
அறைக்கு மூணுமூணு பேராய்
ஆஸ்டலில் தங்கி இருந்தோம்

யாம் மூவர் இருக்கும் அறையில்
ஒரு பையன் பயங்கர “ரிச்சு”
அடிக்கடி போன் கால் சொல்ல
ஆபீஸ்பையன் வந்துவந்து போவான்

அன்றொரு நாள் மதிய வேளை
என் ஜோலி நோக்காம் வேண்டி
ஆபீஸ்ரூமில் தலையைக்காட்ட
திறந்திருந்தும் ஒருவருமில்லை

போகலாம் என வெளியில் வரவும்
போன்பெல் அங்கே அடிக்கவும்
வேர்த்துவிறுத்து பயந்துபோயி
அக்கம்பக்கம் எட்டிப்பார்க்க

யாருமில்லை என்பதை அறிந்து
ஓடிவிடலாம் எனவும் நினைக்க
மனதிலே துணிவைத் தூண்டி
மெல்லப்போய் ரிசீவர் எடுத்தேன்

“அலோ” என்று ஒலியும் கேட்க
“அலோ” என நானும் வினாவ
என்னறை நண்பனை வேண்டிப்
பணித்தது பெண்ணின் குரல்தான்

அழைக்கிறே னென்று சொல்லி
ஓடோடி நண்பனிடம் பறைய
போனவன் உடனே வந்தான்
எள்ளும்கொள்ளும் முகத்தில் வெடிக்க

என்னைப்பார்த்து ஃபூல் எனக் கூற
ஏன் என நானும் முறைக்க
ஆபீசில் “ரிசீவரை கூக்கில்”
அமர்த்தியது விளங்கவே இல்லை.

 
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: