டிரெயினீஸ் ஆகிய
நாங்களெல்லாம்
கோவா ஒரு நாள்
டூர் செல்ல
திட்டம் போட்டோம்
சில நாளாய்
டிராவல் இனிதாய்
இருப்பதற்கு
இரயிலில் பயணம்
லோண்டா வரை
பஸ்ஸில் பயணம்
பனாஜி வரை
சீப்பாய் செலவும்
இருப்பதினால்
சொன்னார் சம்மதம்
அனைவருமே
டிப் டாப்பாய்
டிரஸ் செய்து
இளமை மிடுக்காய்
புறப்பட்டு
ஒருவரை ஒருவர்
அழகு மிஞ்ச
அடைந்தோம் அன்று
“அஞ்சும்”பீச்
எல்லோரையும் நான்
நோக்கிவிட்டு
என்னுள் கிடந்த
ஒரு டவுட்டை
அருகில் நடந்த
நண்பனிடம்
அப்பாவியாய் நான்
அவிழ்த்துவிட
இன்னுமா தெரியலை
உனக்கென்று
எகத்தாளமாய் அவன்
சிரிக்க
சின்னக்குழந்தையாய்
நான் நின்று
சொல் சொல்லெனப்
பின் தொடர
சொல்லக்கூடா
ரகசியமாய்
அவனும் அப்பொழுது
பொத்திவைக்க
ஒவ்வொருவர்
கண்ணிலும் பளபளப்பு
எதையோ தேடும்
எதிர்பார்ப்பு
தேடித்தேடி
சோர்ந்தபின்னர்
நண்பர்களெல்லாம்
கூச்சலிட
சஸெஷன் கொடுத்த “சம்பத்”தும்
செய்வதறியா
மலைத்து நிக்க
நானும் அங்கு போய்
முன் நின்று
காரணம் புரியாமல்
களைப்புற்று
சத்தம் போட்டேன்
அவனிடத்தில்
சுற்றும் ரகசியம்
சொல்லென்று
சொல்ல அவன்வாய்
திறக்குமுன்
எல்லோர்
செவியையும் ஒலி தாக்க
“அண்ணோ அவ்விட”
எனச்சொன்னான்
மகிழ்ச்சியில் எங்கள்
மலையாளி
ஜெர்மன் நங்கை
அங்கொருத்தி
இருபத்தெட்டில்
பிறந்த மேனியாய்
கொஞ்சல்
கொஞ்சலாய் நீச்சலடித்து
கொஞ்சம்
கொஞ்சமாய் காட்சி தந்தாள்.
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
Beautiful.................
ReplyDelete