எழுபதுவயது
கிராமவாசி
“இல்லிட்டிரேட்”
பட்டம் பெற்றவர்
இளவயதிலேயே “லிட்டரேட்”
ஆன
பாசமிகுவுடன்
பயணம் செய்ய
மூன்று மைலுக்கு
அப்பாலுள்ள
வேப்பூரு
பஸ்ஸ்டேண்ட் செல்ல
தடி ஊன்றித் தானே
நடக்க
தடியில்லாமல்
பேரன் தொடர
போகும்வழியில் கேட்டது
எல்லாம்
கள்ளக்குறிச்சிக்கு
சார்ஜ் எவ்வளவு
கண்டுபிடித்து
சொல்லுமென்க
பையனும்
சொல்கிறேனென்று
வழியெல்லாம்
வருவோரைக்கேட்டு
பதினெட்டு ரூபாய்
இருவருக்கென்க
கிழவரும்
“அவ்வளவா” என்று
வாய் பிளந்து
அதிசயித்துப்போக
இரண்டு மணி தூரம்
நடந்தபின்னே
பஸ்ஸ்டேண்டும்
இவர்களை வாங்க
பையன் நோக்கினான்
“கள்ளக்குறிச்சி”யை
பார்த்தங்கே
ஏறிக்கொள்ளச் சொல்ல
தாத்தா பேரன்
இருவரும் ஏற
கண்டக்டரும்
“ரைட்” கொடுக்க
கடைசி சீட்டில்
இருந்த பேரனை
பஸ்ஸில்
எழுதியிருப்பதை படிக்கச்சொல்ல
பையனும் பஸ்பூரா
நோக்கி
சிகரெட்
புகைக்காதீர்களென்றும்
ர ற வை சுரண்டினதாலே
கம் சிம் பும்
நீட்டாதீர்களென்றும்
நிற்கும் முன்
இறங்காதீர்களென்றும்
போதையில் பஸ்ஸை
இயக்காதீர்களென்றும்
எழுதப்பட்ட
வாக்கியமனைத்தையும்
தீர்கள் தீர்கள்
எனச் சொல்லி முடிக்க
தாத்தாவும்
பேரனைச் சீண்டி
விட்டுவிடாமல்
மறுபடியும் படி என்க
தீர்கள் தீர்கள்
எல்லாவற்றையும்
தயக்கத்துடன்
பிறகும் படிக்க
இத்தனை தீர்கள்
எழுதிய பஸ்காரன்
எதிர்பார்த்த ஒன்னை
விட்டுப்பிட்டானே
என்ன அது எனப்
பேரனும் கேட்க
டிக்கட் வாங்கா
“தீர்கள்” என்றார்
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
simply superb...........
ReplyDelete