மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது
பூனா என்ற பெரும் நகரம்
நான் அங்கே செல்வேன் என்று
இம்மியளவு கூட கனவியதில்லை
அன்றொரு நாள் வங்கியில் இருக்க
கிளை என்னைக் கெஞ்சலாய் அழைக்க
நானும் அங்கே எரிச்சலாய்ப் போக
லெட்டர் கண்டதும் மகிழ்ச்சியால் துள்ள
ஒருமாத டிரெயினிங்க் கொடுக்க
லெட்டர் என்னைப் பூனா அழைக்க
காலேஜ் ஆஃப் அக்ரிகல்சரல் பேங்கில்
நான் ஒரு நாள் அடி எடுத்து வைக்க
பேங்குகள் பலவாய் இருந்தும்
செய்யும் தொழிலால் ஒன்றாய்கூட
பல மாநில அக்ரி மக்களை
சேர்த்து வைத்தது பூனா நகரம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
யாருமில்லை அயல்நாட்டு சின்னர்
இருந்தும் உள்நாட்டு மொழியால்
அவரவர்தம் மொழியோடு பழக
தென் நாடோ இந்தியை வெறுக்க
வடநாடோ ஆங்கிலம் மறுக்க
பிரிவு பிரிவாய் அக்ரியின் கூட்டம்
மாநிலத்தோடு மட்டும் சேர
ஓரிரண்டு நாட்கள் கழிந்ததும்
ஒருவிதமாய் வகுப்புகள் தொடங்க
ஆசிரியர் எடுத்த முயற்சிகள்முற்றி
அனைவரும் அக்ரி இந்தியரானோம்
அக்ரி பற்றிய பேச்சுக்களாலே
அவரவர் உடன்பட்டு போனோம்
திட்டம்போட்டு மண்வளம் உயர
புதுப்புது உத்திகளைக் கையாளச்சொல்ல
அவரவர் அறிந்த அனுபவ அறிவை
எல்லோர்க்குமாய் எடுத்துக் கூறி
மனம் விட்டு பேசி மாநிலம் கடந்தோம்
மொழிதடை நீங்கி மனம் பகிர்ந்தோம்
மாதம் போனது சிலநாட்களாய்த் தோண
மொழியால் அக்ரியாய் இந்தியராகி
நண்பர் சிலராய் வந்த நாங்கள்
நண்பர் பலராய் கலைந்து சென்றோம்
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
.
good.....
ReplyDelete