Wednesday, 15 August 2012

26. தென்னந்தோப்பு


நடந்ததையெல்லாம் மறந்து விடு
சொன்னேன் நான் கண்டிப்பாய்
சின்னஞ்சிறுமி அவள் ஆகையால்
இன்னமும் அழுதே நின்றிருந்தாள்

பதிமூன்றுதான் அவளுக்கு வயசு
பக்குவப்படாத சின்னஞ்சிறிசு
அன்று ஏதோ ஆசைப்பட்ட மனசு
அவசரத்தினால் தூண்டப்பட்ட இளசு

தென்னந்தோப்பில் நடந்த இச்சம்பவம்
வெளியில் தெரிந்தால் மிகவும் கேவலம்
கல்யாணமாகாத வாலிபன் அதனால்
கவலைப் பட்டேன் வெகுவாய் வேர்த்து

உற்றார் உறவினர் அறிந்து கண்டித்தால்
ஊராரெல்லாம் சிரிப்பாய் சிரிப்பார்
படித்த வாலிபன் செய்யும் செயலா?
பார்த்தவரெல்லாம் கேட்டு நகைப்பார்

நினைக்க நினைக்க நெஞ்சம் நடுங்கி
சிறுமியை நான் அருகில் அழைத்தேன்
ஒன்றும் நீ சொல்லாமல் இருந்தால்
ஒரு ரூபாய் கொடுப்பேன் என்றேன்

கனிந்த அவளது கன்னமும்
கண்ணீர் ஓட வாய்க்கால் போட
கண்களைத் தேய்த்து மனமும் தேறி
சரி எனச் சொல்லி வாயை மூட

தோட்டக்காரன் மகளென அறிந்து
கச்சிதமாய் காரியம் முடித்தேன்
அப்பாடா என்று மனம் ஆறும் முன்னே
அப்பன்காரன் ஆஜரானான் அங்கே

பீதியுடன் நான் அவளை நோக்க
நடந்ததைச் சொல்லென மகளைக் கேட்க
உண்மையைக் கூற அவள்கொஞ்சம் தயங்க
ஓடிவிடலாமென நானும் முயற்சிக்க

திருப்பி திருப்பி அவளைக்கேட்டும்
விடைவராமல் என்னை அவன்முறைக்க
திருட்டு முழி நானும் முழித்தேன்
பதில் கூறுமுன் சட்டையைப் பிடித்தான்

வேண்டாம் என அவள் என்னைத் தடுத்தும்
யாருமில்லை எனப் புறக்கணித்து மீறி
ஆசைஆசையாய் வெட்டிப்போட்ட எளநீ
அனாதையாய் விட்டுவிட்டுச் சென்றேன்


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU


1 comment: