மானந்தவாடி ஓர்
அற்புத நகரம்
மக்கள் வாழ நல்ல
ஒரு ஸ்தலம்
சீதோஷ்ண நிலை
சிறப்பாக இருக்கும்
சிலப்போ ஒரு
ஊட்டி போல் தோணும்
சூரியனைச் சதா
மேகங்கள் சூழ்ந்து
சுற்றுப்
புறங்களை சில்லென வைக்கும்
நறுமணம் கமழ
மலர்கள் மலர்ந்து
நாலாபுறமும் தென்றலாய்
வீசும்
வீட்டைவிட்டு
வெளியில் நடந்தால்
உடம்பு பூரா
குளிர்ச்சி உண்டாகும்
வெளியிலிருந்து
வீட்டுக்கு வந்தால்
மனம் முழுக்க
மகிழ்ச்சி உண்டாகும்
பனிபெய்யும்
பகுதிகளில் எல்லாம்
பட்டுபோல் உள்ள
இலைகளின்மீது
சிறுசிறு
திவலைகள் ஒன்றாய்ச்சேர்ந்து
சொட்டுசொட்டாய்
கொட்டிக்கொண்டிருக்கும்
காப்பிதோட்டத்தைச்
சேர்ந்து பார்த்தால்
தும்பைப்பூ போல
வெள்ளைப் போர்வையை
தோட்டம் முழுக்க
போர்த்தியது போல்
வெள்ளைக்கூடாரம்
மனத்தில் தோன்றும்
மழைபெய்யும்
கார்கால நாட்களில்
மண்ணும் விண்ணும்
மழைக்கோடு இழுக்கும்
மண்ணெல்லாம்
செம்மண் ஆதலால்
நீரோடு சேர்ந்து
குயமண் ஆகும்
எப்பொழுதும்
கையிலொரு குடையுடன்
இல்லையென்றால்
மழைக்கால கோட்டுடன்
சின்னஞ்சிறார்
முதல் பெரியோர்கள் வரை
நடந்துசெல்லும்
காட்சி கண்கொள்ளா காட்சி
விதவிதமாய்ப்
பூத்த மலர்களின் நடுவே
நங்கையர் பலர்
பஸ்ஸுக்கு நின்றால்
மலர்களுக்குப்
போட்டி மங்கையரா என்றும்
மணிக்கணக்காய்
டிபேட் செய்யத்தோன்றும்
இளவேனிற்காலத்தில்
வள்ளியூர்காவு
தெய்வதரிசனம்
செய்து திரும்பிவந்தால்
இளம்வெய்யிலில்
மெய்யெல்லாம் காணும்
கலை நயத்துடன்
மானந்தவாடி தோற்றம்
வெயில் காலத்தில்
இருக்கவே இருக்கு
நகரருகில் ஓடும்
சுத்தமான ஆறு
ஆடவர் பெண்டிர்
அங்கே குளிக்கும் காட்சி
எக்காலத்தையும்
ஒரே நிலையாய் ஆக்கும்.
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
beautiful...
ReplyDelete