Wednesday, 4 July 2012

11. பொற்காலம்


பஞ்சாப் பிரதேசத்தில்
டெர்ரரிஸம் உச்சகட்டம்
உயர்பதவி கொடுத்தங்கே
உத்தியோக மாற்றம் செய்ய

தீவிரவாதப் பயத்தினாலே
கேன்சல் செய் என மனைவி ஊட
“புரமோஷன்” குதிரைக்கொம்பென
விடாப்பிடியாய் நானும் மறுக்க

“ஃப்ளைட்”ட்ராவெல் ஆசைகாட்டி
பெரிய பிராஞ்சு மோகம் கூறி
நாமங்கே சென்ற பின்னே
டெர்ரரிஸம் சாகும்மென்று

“ஓமன்” போல் நானும் சொல்ல
உண்மையில் அவளும் நம்ப
கண்ணீரைத் துடைத்துவிட்டு
பச்சைக்கொடி தினமும் காட்ட

டிரான்ஸ்பர் ஆர்டர் கிட்டியவுடனே
டி.ஏ அட்வான்ஸ் டிரா செய்ய
பருத்தபர்ஸை பார்த்தவுடனே
பத்தினியும் புடவை கேட்க

ஒன்றிரண்டு எடுத்துக்கொடுத்து
O.K வை தினமும் வாங்கி
குருட்டுத் தைரியம் கூடச் சேர்த்து
குடும்பமாய்ப் புறப்பட்டோமே

அம்ரிட்சர் அடைந்தவுடனே
அம்மணிக்கு உதறல் காண
காண்டதொரு காட்சி எல்லாம்
GUN TROTTING போலீசேதான்

அமைதியைச் சிறிதும்காணா
சீக்கியரின் புண்ணியபூமி
முகத்தின்முன் அச்சுறுத்தலை
முகமன் கூறி வரவேற்பளிக்க

ஓடிடுவோமா ஊருக்கு என
உடையவளின் கண்கள் பனிக்க
பதுக்கிவந்த என்பயத்தையும்
பாடுபட்டு தள்ளி வைத்து

உறுதிபடப்போ இருந்ததாலே
“ஓமனும்” விரைவில் பளித்து
பத்தினி இப்போ கூறிவருகிறாள்
“பஞ்சாப்” காலம் பொற்காலமென்று.

KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: