இரண்டு நாளாய்
குளிக்கவில்லை
சாமி மீது
சத்தியம் செய்தேன்
மனமிரங்கி
வெண்ணீர் வைத்து
மதரும்
குளிக்கச்சொன்னாள்
சோப்பு டவல்
சாம்பெடுத்து
ஓப்பனாயிருந்த
பாத்ரூம் சென்று
ஜட்டி தவிர
மற்றதைக்களைந்து
குளிக்கத்தான்
ஆயத்தமானேன்
பதமான சுடுநீரென்பதால்
பிரியமுடன்
தேய்த்துக்குளிக்க
சோப்பு நுரை
உடலில் பரவ
சுகமெல்லாம்
மனதில் தெரிய
ஆம்பளையா நீ
ஆம்பளையாவென
மீண்டும்
மீண்டும் அரவம் கேட்க
திடுக்குற்று
திசை பூரா திரும்பி
ஆளில்லா மாயம்
கண்டேன்
கேட்ட குரலால்
மனமும் குழம்பி
கேள்வித்தொடரால்
சிந்தனை போக
ஆம்பளையா நீ
ஆம்பளையா என
அதே குரல்
மீண்டும் ஒலிக்க
சின்னவயதில்
சபலமும் உண்டு
சம்பளம் அப்போ
கரைந்ததும் உண்டு
சேரக்கூடா
சேர்க்கையினாலே
சில சமயம்
வருத்தமும் உண்டு
மூடிமூடி நானும்
மறைத்து
லைப்பைத்தான்
நடத்திச்செல்ல
ஆம்பளையா என்ற
கேள்வி
அனுதினமும் என்னைக்கொல்ல
இருந்தும் நான்
இக்குறை பற்றி
எவரிடமும்
பறஞ்சதும் இல்லை
அறிந்தோரப்போ
உண்டென்றெண்ணி
அழும் நிலை
நானும் எட்டி
குளியலையும்
முடித்துக்கொண்டு
மெதுவாய் நான்
செல்லும்பொழுது
யதேச்சையாய்
பக்கத்து ஜன்னல்
ஈர்க்குமுன்னே
நானும் திரும்ப
அழகு மங்கை அங்கே
ஒருத்தி
தானீன்ற
சின்னஞ்சிறிசை
ஆம்பளையா நீ
ஆம்பளையா வென
அன்போடு
கொஞ்சிக்கிட்டிருந்தாள்.
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
Really superb......
ReplyDeleteNice one..
ReplyDelete