டெபாசிட்டுக்கும்
டார்கெட்டு
அட்வான்ஸுக்கும்
டார்கெட்டு
கொடுக்கச்
சொல்லியும் டார்கெட்டு
திருப்பி
வாங்கவும் டார்கெட்டு
டார்கெட்
டார்கெட் டார்கெட்டு
தூக்கம் இதுவால்
தினம் கெட்டு
பைத்தியமானேன்
பகலில் நான்
பிதற்றலானேன்
இரவில் நான்
டிவிஷன் கிளையை
தினம் மிரட்ட
கிளை பதிலுக்கு
என்னை விரட்ட
அக்ரி நான் என்ன
செய்ய
ஆலோசித்தேன்
தினம் அலைய
கண்ட ஊருக்கு
நான் சென்றேன்
வந்த பார்ட்டிகளை
நான் கேட்டேன்
டெபாசிட்டைப்
போடச்சொன்னேன்
அட்வான்ஸை
எடுக்கச்சொன்னேன்
வட்டிக்கணக்கு
தான் பார்த்து
வந்தவரெல்லாம்
என்னை முறைத்து
டெபாசிட்டை குளோஸ்
செய்து
அட்வான்ஸையும்
தினம் குறைத்து
ஏறிய ஃபிகரை
இறக்கிவிட்டார்
என்னை மிகவும்
கலக்கிவிட்டார்
வேறு வழி அறியா
நான் திகைக்க
விஷயம் புரியா
கிளை முழிக்க
ஓலை வந்தது
ஆர்டினரியாய்
ஒரு வாரம்
கழித்து டி.ஓ.வாய்
ஃபிகரும் இம்ப்ரூவ்
ஆகாததால்
பெர்சனாலாவே
டி.எம். வந்துவிட்டார்
கோபக்கனலை
முன்தேக்கி
கிளையைப்
பிடித்து கொசின் வீசி
புழுவாய் அவரை
நெளியவைக்க
பயந்துபோனவர்
என்னை அழைக்க
நடுங்கிப்போனேன்
நானுந்தான்
காரணம் கேட்டால்
சொல்லத்தான்
மனுஷன் அவரும்
விடாப்பிடியாய்
மாற்றி மாற்றி கேட்கத்தான்
கூடுதல் வட்டி
டெபாசிட்டுக்கும்
குறைவாய் வட்டி
அட்வான்ஸுக்கும்
சிபாரிசு செய்ய
நான் கோர
“பேங்க்க்குப்
புதுசா”என முறைத்தார்.
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
super..
ReplyDelete