அக்ரி என்னை டச்
பண்ணாமல்
கிளையை மட்டும்
டிரான்ஸ்பர் செய்ய
“ஆக்டிங்” தந்த
வேலைப்பளுவால்
வரும் ஆளைத்
தினமும் நினைக்க
அன்று வந்த
கடிதங்களோடு
டி.ஏ பில்
காப்பியும் வரவும்
ஆவலோடு எடுத்துப்
படித்தேன்
வருபவர் முன்னுரை
அறிந்தேன்
கொஞ்ச நாள்
இடைவெளிக்குள்ளே
வந்துவிடுவாரென
நினைப்பு தோண
ஆக்டிங்கை
சீக்கிரம் உடைக்க
வந்தேவிட்டார்
ரெண்டே நாளில்
அறிமுகத்தை
நன்றாய் நடத்தி
பழைய பிராஞ்சின்
பெயர்களைக் கேட்க
வேலூர் சேலம்
ஈரோடு என்க
ஆம்பூர்
வாணியம்பாடி அணைக்கட்டென்க
என்னைப்பற்றிய
விவரங்கள் கேட்க
நானும் சொன்னேன்
திருப்தியடைந்து
“ஒரு நாள்
கண்டிப்பாய் குவார்ட்டர்ஸ்”வரணும்
உற்சாகமாய்
விரும்பி அழைக்க
பலநாள் கழித்தே
பார்ய குழந்தைகளோடு
மேலாளரின்
வீட்டுக்குப் போக
நானும் அவரும்
பேங்க் பற்றிப்பேச
அவர் மனைவி என்
மனைவி ஓ சாரி சார்ர்ர்ரீ!
என்மனைவியும்
அவர் மனைவியும்
ஊண் உடல் மறந்து
உள்ளே பேச
அதிகம் பேசி
விடைபெற்ற பின்னர்
சீக்கிரமே வீடு
வந்து சேர
மனையாள் சொன்னாள்
படுக்கையின்போது
மானேஜர்
குடும்பம் கஷ்டக்குடும்பம்
ஆறு தங்கைகளைக்
கட்டிக்கொடுத்தும்
இன்னுமொன்று
இருக்குதாமென்றும்
எங்கெங்கென
அறியாமல் வினாவ
வேலூர் சேலம்
ஈரோடு ஆம்பூர்
வாணியம்பாடி
அணைக்கட்டென்றும்
“அடுத்ததெங்கோ”
என ஆச்சரியப்படவும்
சட்டென்று நானும்
உரைத்தேன்
அடுத்தது.........இங்குதான்
இருக்கும்!
புரியாமல் அவளும்
விழித்தாள்
புரியவைத்தவுடன்
அவளும் சிரித்தாள்.
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU
Oh...a side story....
ReplyDelete