Sunday, 29 July 2012

21. மௌனம் சாதித்தேன்


பசுஞ்சோலை எங்களது கிராமம்
பத்து ஏக்கர் எங்கள் தோட்டம்
பச்சைப்பசேலென மரம்செடிகொடிகள்
தோட்டத்தைச்சுற்றி வேலியாய் இருக்க

பத்துப்பன்னிரண்டில் சிறுவனாய் நானும்
பசுமையைப்பார்த்து தினமும் களிக்க
எல்லோருக்கும் இஷ்ட பிள்ளையாய்
எது கேட்டாலும் கிடைக்கும் கிள்ளையாய்

வளர்ந்துவரும் பருவத்தில் நானும்
தோட்டம் காணச்சென்றேன் ஒரு நாள்
மாங்காய், மரத்தில் இருப்பதைக் கண்டு
மாமாவிடம் பறித்துக்கொடுக்கச் சொல்ல

“அவசர”த்திலிருந்த மாமா என்னை
மரத்தின்மீது ஏற்றியே விட்டார்
வேலியில் இருந்த மரத்தில் நானும்
அதிகதிகமாய் காய்கள் எடுக்க

போதுமென்ற அளவுக்குப் போயி
கீழே இறங்க மாமாவைத் தேட
மாமா அங்கே இல்லாததைக்கண்டு
மனத்தில் பயம் தேறக்கண்டேன்

இருந்தாலும் செய்வது அறியாமல்
மரத்திலேயே தொடர்ந்து இருந்து
வேலிக்கடுத்துள்ள பக்கத்து நிலத்தை
வெறுதே நான் பார்த்துக்கிட்டிருந்தேன்

அப்பொழுதொரு ஆணும் பெண்ணும்
மர நிழல் நோக்கி நடந்து வரவும்
அவசர அவசரம் முகங்கள் காட்ட
அறிந்து கொண்டேன் அவர் வேறு வேறென

சத்தம் போடாமல் நான் அங்கு இருக்க
வந்தவர்கள் சுற்றுமுற்றும் நோக்க
யாருமில்லை என “அறிந்து” கொண்டு
புடவை ஜாக்கெட் வேட்டியைக் கழட்ட

அவசரத்தில் இடம் ஒன்றைத் தேட
அமர்ந்திருந்தேன் அமைதியாய் மரத்தில்
பரக்க பரக்க பார்வையை மாற்றி
படுத்துக்கொண்டே சில்மிஷம் செய்ய

வரம்புக்குமேலே போகுது என்று
“வாவ்” என நானும் கத்த
துண்டைக்காணோம் துணியைக்காணோமென
அவர்கள் எழுந்து வேகத்தில் ஓட

சத்தம் கேட்டு மாமா ஓடிவர
இவர்கள் ஓடுவதை அவரும் பார்க்க
காரணமென்னவென்று என்னைக் கேட்க
கம்மென்று மௌனம் சாதித்தேன்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: